பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. புலியூர்க்கேசிகன் திருமால் (18)- 139 நீயே எல்லாம் சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு அவையும் நீயே அடுபோர் அண்ணால்! 15 அவையவை கொள்ளும் கருவியும் நீயே! முந்தியாம் கூறிய ஐந்தனுள்ளும் ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே! இரண்டி னுணரும் வளியும் நீயே! மூன்றினுணரும் தீயும் நீயே! - நான்கி னுணரும் நீரும் நீயே! . . 20 ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே! - * அதனால், நின்மருங்கின்றுமூவேழ் உலகமும் மூலமும் அறனும் முதன்மையின் இகந்த காலமும் விசும்பும் காற்றோடு கனலும்; 25 “ போரிடத்துப் பகைவரைக் கொன்றழிக்கும் தலைம்ை உடையோனே! - சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு என்று உரைக்கப்படும் ஐந்தான அவையும் நீயே யாவாய்! அவையவை உணர்ந்து கொள்ளுதற்கு உரிய ஐம்பொறிகளும் நீயே யாவாய்! - - - முற்பட யாம் உரைத்தவான ஐம்புலன்களுள், இசைமை எனப்படும் முதலதான ஒசையால் அறியப்படும் வானமும் நீயே! ஓசையும் ஊறுமாகிய இரண்டானும் அறியப்படும் காற்றும் நீயே ஒசை ஊறு ஒளியாகிய மூன்றானும் உணரப்படும் தீயும் நீயே. ஒசை ஊறு ஒளி சுவை என்னும் நான்கானும் உணரப்படும். நீரும் நீயே ஒசை ஊறு ஒளி சுவை நாற்றமென்னும் ஐந்தானும் முற்ற உணரப்படும் நிலனும் நீயே! - - - ஆதலினாலே, இம் மூவ்ேழான உலகப்பகுதிகளும், அனைத்துக்கும் மூலமாகிய ஆதிப்பொருளும், அறநெறியும், முதன்மையினின்றும் கடந்து விளங்கும் காலமும், வானமும், காற்றும், தீயும் ஆகிய அனைத்தும் நீயேயாவாய்! சொற்பொருள் : இசை - ஒலி. தோற்றம் - ஒளி அடு - கொல்லும். கருவி - ஐம்பொறிகள். மூலம் - ஆதி முதலில் தோன்றியவர்; இதனைச் சுத்தமாயை என்பர். முதன்மையின் இகந்த ஆதி கடந்த அநாதியான. விளக்கம் : ஆதியும், அதனிடத்துத் தோன்றிய மாயையும், அதனின்றும் விளக்கம்பெற்ற ஐம்பெரும் பூதமும், அவற்றை உணரும் புலன்களும், உணரக் கருவியாக விளங்கும் பொறிகளும், அநாதியாகிய காலமும் எல்லாம் திருமாலாகிய நீயே என்பதாம்.