பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 - பரிபாடல் மூலமும் உரையும் சொற்பொருள் : கறை - குற்றம் நறை -.மணப்பொருள்கள்; அகில் முதலியன. கேளிர் - கணவர். உட்கி நெஞ்சம் நடுக்குற்று. சிறந்தோர் - தேவர்; இந்திரன் உள்ளிட்டோர். துன்னி - நெருங்கி; சேர்ந்து. - . - விளக்கம்: இன்னுமின்னுமவை ஆகுக' என்றது.பெருமான் மென்மேலும் அடியார்க்கருள்தலின், அவன் புகழும் மென்மேலும் பெருகிச் சிறக்க என்றதாம். - 'முருகனின் புகழ் பெரிது அவன் அடியவர் அவனைத் தொழலாற் பெறுகின்ற பயனோ அப் புகழினும்பெரிது’ என்கின்றனர். 'தொண்டர்தம் பெருமை சொல்லற்கும் அரிதே' என்னும் சான்றோர் வாக்கினையும் இங்கு நினைக்க இறைமை அனைத்தினும் சீரியது; செவ்வியது; புகழால் மிக்கது. அதனையே சார்ந்து நின்று, அதன் நினைவாகவே தம்மை ஈடுபடுத்துவார் பாலும் அவ்விறைமையின் பண்புகள் மிளிரத் தொடங்கும்; தொடங்கவே, அவர் பெருமை மிக மிகப் பெரிதாயிற்று என்க. எளிதாகக் கிடைக்கும் இதனைப்பெறுதற்கு எல்லாரும் முனைந்து முன்வர வேண்டும் என்பதாம். - பதினைந்தாம் பாடல் திருமால் (15) பாடியவர் : இளம்பெரு வழுதியார்: பண் வகுத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனார்; பண் ; நோதிறம். . . துறக்கமும் அரிது! புலவரை யறியாப் புகழொடு பொலிந்து நிலவரைத் தாங்கிய நிலைமையிற் பெயராத் தொலையா நேமிமுதல் தொல்லிசை அமையும் புலவராய் புரைத்த புனைநெடுங் குன்றம் பலவெனின் ஆங்கவை பலவே, பலவினும், 5 நிலவரை யாற்றி நிறைபயன் ஒருங்குடன் நின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே, சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்புறு மலரகன் மார்பின் மைபடி குடுமிய - குலவரை சிலவே, குலவரை சிலவினும் - 10 சிறந்தது; கல்லறை கடலும் கானலும்போலவும் புல்லிய சொல்லும் பொருளும் போலவும் எல்லாம் வேறுவே றுருவின் ஒருதொழில் இருவர்த் தாங்கு நீள்நிலை ஓங்கிருங் குன்றம்; - நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்! * 15