பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் திருமால் (15) 147 - அறிவின் எல்லையானும் அளந்து அறியப்படாத புகழோடு சிறப்புற்று விளங்குபவை; இந் நிலவுலகைத் தாங்கித் தாம் நிற்கும் நிலையினின்றும் என்றும் பிறழாதவை; அழிவற்ற சக்ரவாளம் முதலாகச் சொல்லப்படுபவை; பழம் பெருமையோடு பொருந்தி யவை; புலவர்கள் ஆராய்ந்து உரைத்த அழகுடன் உயர்ந்து நிற்பவை. பலவான பெரு மலைகள் ஆகும். அப் பலவற்றுள்ளும், நிலவுலகிற்கு உதவுவனவாகிய பல பொருட்களைத் தந்து, நிறைவான பயன்கள் ஒருங்கே தம்முடன் நிலையாக அமைந்து விளங்க விளங்கும் மலைகள் சிலவாகும். அச் சிலவான மலைகளுள்ளும், மலர்களால் நிறைந்த சுனைகளையும், மேகங்களாற் சூழப்பெற்ற முடிகளையும் கொண்டு விளங்கும் குலகிரிகள் என்பன மிகமிகச் சிலவே. - - அத்தகைய குலவரைகள் சிலவற்றினும் சிறந்தது, திருமா லாகிய நினக்குரிய திருமாலிருஞ் சோலைமலைக் குன்றமாகும். கல்லென்னும் ஒலியோடு ஆரவாரிக்கும் கடலும், கடற்கானலும் போன்றும், சொல்லும் அதனிற் பொருந்திய பொருளும், போன்றும், வேறுவேறு உருவினைக் கொண்டு ஒரு தொழி லையே செய்துவரும் திருமாலும் பலராமனுமாகிய இருவரையும் தாங்கி நிற்கும், நெடிய நிலைபேற்றைக் கொண்டதும், மிகவுயர்ந்த திருமாலிருஞ் சோலைமலைக் குன்றம் ஆகும். அக் குன்றத்து உறைவோனாகிய, மணங்கமழும் பூங் கொத்துக்களோடுங் கூடிய திருத்துழாயினைச் சூடியோனாகிய நீதான் அருள் செய்தால் அல்லாமல், தனிச்சிறப்புப் பெற்றுள்ள துறக்கவுலகை ஏறிச்சென்று சேர்தல், யாவர்க்கும் அரியதாகும். சொற்பொருள் : புலவரை அறிவின் எல்லை. புகழ் சிறப்பு. பொலிந்து - அழகு பெற்று. பெயரா - திரியாத நேமி - சக்கரவாளம். பயன் - பயன்தரு பொருள்கள். பெட்புறும் விருப்பங் கொள்ளும். 'மலரகன் மார்பு’ என்றது, மலர்கள் நிரம்பிய சுனைகளை மை கருமை : கார்மேகத்தைக் குறித்தது. குடுமி - மலை முடி கல்லறை - கல்லென ஒலிக்கும். ஒரு தொழில் - காக்குந் தொழில் வீறு தனிச் சிறப்பு. துறக்கம் - போகவுலகம், வைகுண்டம். . விளக்கம் : குல்வரை என்றது அஷ்ட குல மலைகளை. கடல் நீலநிறம்; கடற்கானல் வெண்மை நிறம்; இது நிறத்தால் கண்ட ஒற்றுமை நயம். இருவரும் கார்மேனி வெண்மேனியராக இருப்பதனை இவ்வாறு கூறினர். -