பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-செவ்வேள் (18) r - 169 தண்ணிய தளிர்களை மரங்களிடத்தே தோற்றுவித்த தன் செயலை, உலகுக்கு எடுத்துரைத்தாக, இருண்ட கார்மேகங்கள் முழக்கமிட்டிருக்கும் வெற்றி கொண்டது, நின் மலை அதனிடத்தே, கண்டார் கண்களைப் பொருதி அழிப்பதுபோல ஒளி செய்த வண்ணம், அடர்ந்திருந்த இருளை நெருக்கிப்பிளந்து ஊடறுத்துக் கிழிக்கும் மின்னற்கொடிகள் பலவும் தோன்றுகின்றன! - - - - ஒண்மை சுடரும் நெற்றிப்பட்டதைக் கொண்ட நின்பிணி முகக் களிற்றைப் போன்று விளங்குவது நீ கோயில் கொண்டி ருக்கும் திருப்பரங்குன்றம். அதனிடத்தே, எழுதப் பெற்ற ஒவியங்களாலே அழகுபெற்று விளங்கும், அம்பலமாகிய பொது மண்டபமானது, காமவேளின் அம்பினது தொழிலானது நிலைபெற்றிருக்கும் இன்ப மாளிகையாகும். இஃது என்னையோ? சொற்பொருள் : மங்குல் மழை இருண்ட கார்மேகம். முழக்கம் இடி முழக்கம். விறல் - வெற்றி சுடர்ந்து சுடரிட்டு. இடந்து - பிளந்து அம்பலம் - முருகனின் கோயிலுக்கு முன்பக்கத்தே அனைவரும் வந்து கூடியிருக்க விளங்கும் பொதுவிடம். * - - - - - மலையின் அழகு! ஆர்ததும்பும் அயிலம்பு நிறைநாழி - '30 சூர்ததும்பு வரைய ; காவால் கார்ததும்பு நீர் ததும்புவன சுனை, ஏர்ததும்புவன பூவணி செறிவு: போர்தோற்றுக் கட்டுண்டார் கைபோல்வ, கார்தோற்றும் காந்தள் செறிந்த கவின்; 35 கவின்முகை கட்டவிழ்ப்பதும்பிகட் டியாழின் புரிநெகிழ்ப்பார் போன்றன கை : அழகு த்தும்புகின்ற கூர்மையான அம்புகள் நிறைந்த அம்புக் கூட்டைப்போலச் சூரர் மகளிரால் நிரம்பியிருந்த மலையுச்சிப் பகுதிகள் விளங்கும். மலையிடத்துள்ள சோலைப் பகுதிகளால் தடுக்கப்பெற்றுக் கார்மேகங்கள் நிரம்பி வழிந்த வண்ண்மாயிருக்கும். அவை பெய்த மழையினாலே சுனைகளுள் எல்லாம் நீர் நிரம்பித் ததும்பி வழிந்து கொண்டிருக்கும். பூக்களால் செறிவுற்று விளங்கும் மலைச்சாரற் சோலைப் பகுதிகளிலே அழகு ததும்பிக் கொண்டிருக்கும். - - கார்மேகத்தைக் கண்டவுடன் செறிவாகப் பூத்துக்கிடந்த காந்தட் பூக்களின் அழகானது, பாண்டியனோடு செய் போரிலே தோற்றுக் கட்டப்பட்டு நிற்பவரின் கைகளைப்போல எம் மருங்கும் விளங்கும், அழகிய மொட்டுக்கள் தம் கட்டவிழ்ந்து