பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பரிபாடல் googolo e-comulo மலரத் தும்பிகள் அவற்றுள் மொய்த்திருப்பதானது, யாழ் நரம்பின் முறுக்கினைத் தளர்த்துபவரின் கைகளைப்போலத் தோன்றும். சொற்பொருள் : ஆர் - அழகு. அயல் - கூர்மை. நாழி அம்புப் புட்டில். சூர் - சூரரமகளிர் ஏர் - அழகு பூவணி - பூக்கள் செறிவாக அணிசெய்தாற்போலத் தோன்றும் தோற்றம் விழாக்காலத்துப் பூவணிபோலத் தோன்றும் தோற்றம் கவின் பேரழகு புரி முறுக்கு. - - விளக்கம் : 'ஆர் ததும்பும் அயிலம்பு’ எனக் குறித்தது, காமனின் கணைகளாகிய மலரம்புகளை என்க. சூரர மகளிர் தம்முடைய கவனிமலிந்த தோற்றத்தால், கண்டாரைக் காமுறச் செய்து மயக்கிக் கொல்வர் என்பர். * - சுனையின் தோற்றம்! அச்சிரக் காலார்த் தனிமழை கோலின்றே வச்சிரத் தான்வான வில்லு! வில்லுச்சொரி பகழியின் மென்மலர் தாயின 40 வல்லுப்போர் வல்லாய்! மலைமேல் மரம்; - வட்டுருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டுச் சீர் ததும்பும் அரவ முடன்சிறந்து . போர் ததும்பும் அரவம் போலக் - கருவி யார்ப்பக் கருவிநின்றன குன்றம்; 45 அருவி யார்ப்ப முத்து அணிந்தன வரை, குருவி யார்ப்பக் குரல்குவிந்தன தினை : எருவை கோப்ப எழிலனி திருவில் வானில் அணிந்த வரியூதும பல்மலரால் - கூனி வளைத்த சுனை : •. 50 சூதாடு களத்திலே வட்டினை உருட்டிச் செய்யும் வல்லுப் போரிலும் வல்லமையாளனாகத் திகழ்கின்ற பெருமானே! முன்பனிக் காலம் தொடங்கியது. அணியணியாகத் திரண்ட மேகங்கள் ஆரவாரிக்கின்றன. வானகத்தே வச்சிரப்படையுடைய இந்திரனின் வில்லென்று சொல்லப்படுகின்ற வானவில்லும் தோன்றுகின்றது. வில்லினின்று செர்ரியப்படும் அம்புகளைப் போல, மலைமேல் விளங்கும் மரங்களுளெல்லாம் மென்மலர்கள் பலவும் தோன்றி முகிழ்த்துள்ளன. - நின் மலையிடத்தேயுள்ள நின் திருக்கோயிலிடத்திருந்து, நின்னைக் காணவருவாரின் கொடிய உருளைகளைக் கொண்ட தேர்ச்சக்கரங்களின் அழகுததும்பும் தாளஒலியோடு ஒப்புடைய தாகச் சிறப்புற்று, ஒன்றோடொன்று மோதுகின்ற முன்னணிப் படைகளின் போரிடத்தே எழுகின்ற ஒலியினைப்போல, தொகுதி