பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * செவ்வேள் (19) 181 மலர்களால் நிறைந்தும், பல்வேறு வண்ண மலர்களால் மாறுகொண்டும், மலர்க்காட்ாகவே தோன்றும். சில மலர்கள் நிமிர்ந்து விளங்கும். சில மலர்கள் தொடர்ந்து பூத்தவாய்த் தோன்றும். விடியற்காலைப் பொழுதிலே, அகன்ற வானத்தே விண்மீன் கூட்டம் தோன்றினாற்போல, அழகுடன், நின் குன்றின் மேற்பரப்பு எல்லாம் மலரணி பெற்று விளங்கும். - சொற்பொருள் : பாங்கர் - பக்கம். பசும்பிடி - பச்சிலைச். செடிகள். முகிழ் - மொட்டு. எருவை கொருக்கச்சி, பஞ்சாய்க் கோரை. தோடு - இதழ். உருவம் - நிறம். பகைமலர் இலவம் இலைகட்குப் பகையாய் அவற்றை முற்றவும் உதிர்த்துத் தாம் மட்டுமே தோன்றும் இலவம் பூக்கள். நிணந்தவை - தெற்றிக் கட்டியவை. தூக்க மணந்தவை - தொங்கலாகக் கட்டியவை. வரைமலை மலைச்சாரல் - - விளக்கம் : விடியலில் தோன்றும் பரங்குன்றத்து மலைச் சாரலின் மேற்புறத் தோற்றத்தை ஆசிரியர் இவ்வாறு அழகுறக் கூறுகின்றார். ... • - - சிறப்புணவு உண்பர் நினயானைச் சென்னி நிறங்குங்கு மத்தால் புனையாப்பூ நீருட்டிப் புனைகவரி சார்த்தாப் பொற்பவழப் பூங்காம்பின் பொற்குடை ஏற்றி மலிவுடை உள்ளத்தான் வந்துசெய் வேள்வியுள் பன்மணம் மன்னு பின்னிருங் கூந்தலர் கன்னிமை கனிந்த காலத் தார், தின் - 90 கொடியேற்று வாரணம் கொள்கவழ மிச்சில் மறுவற்ற மைந்தர்தோள் எய்தார்; மனந்தார் முறுவல் தலையளி எய்தார்:நின் குன்றம் குறுகிச் சிறப்புணாக் கால்; •, பெருமானே! நினக்குரிய யானையின் நெற்றியை நிறம் வாய்ந்த குங்குமத்தால் அழகு செய்வார்கள். உதிரிப்பூக்களையும் நீரையும் கலந்து தூவுவார்கள். அழகுபடுத்தப் பெற்ற கவரியினை வீசுவார்கள். அழகிய பவழத்தாலே அமைக்கப் பெற்ற அழகிய காம்பினையுடைய பொற்குடையினை உயர்த்துவார்கள். அன்புமலிந்த உள்ளத்தோடு வந்து அடியர்கள் நின்னைக் குறித்த வேள்வியைச் செய்வார்கள். அவ் வேள்விக் களத்திடத்தே பல்வேறு மணமும் செறிந்திருப்பதும், பின்னப் பட்டிருப்பது மான கரிய கூந்தலையுடைய மகளிரும், கன்னிமைப் பருவம் கனிந்த காலச்செவ்வியைக் கொண்ட மகளிரும், நின் விழாக் கொடி ஏற்றப்படும் அந் நாளிலே, நின் யானை கொள்ளும் கவளத்தின் மிச்சிலைச் சிறந்த சிறப்பு உணவாகக் கருதிப் பக்தியோடு உண்பார்கள்.