பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * . . . 180. - - - பரிபாடல் மூலமும் உரையும் - போலத் தோன்றியது. அதனையடுத்திருந்த மற்றொரு மிகச் சிறிய மலரானது அதன் இளங்குட்டின்யப் போலத் தோன்றியது. அதனைக் கண்ட பெண்கள், பாம்பும் அதன் குட்டிகளும் என்றே கருதியவராக மயங்கி நடுநடுங்கினார்கள். - சொற்பொருள் . நனி நுனி - மிகவும் மெல்லிய கொம்பின் நுனிப்பகுதி.நயவரு-விருப்பம் வரத்தக்க நாறினர்-மணமுடைய பூங்கொத்து. சினை போழ் பல்லவம் - கிளையைப் பிளந்து எழுவதுபோலத் துளிர்த்த இளந்துளிர். அலர் முகிழ் - அலரும் பருவத்துஅரும்பு; இது தாமரை முகை தெரிமலர்-அழகிய சிறந்த மலர், நனை - தேன். ஐந்தலை - அழகிய தலை, அவிர் பொறி - ஒளி செய்யும் புள்ளி. அரவம் - பாம்பு. .. நின் குன்றின் மேல்! - - - பாங்கர் - பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்தவாய் ஆம்பல் 75 கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள் எருவை நறுந்தோடு எளியிணர் வேங்கை உருவமிகு தோன்றி யூழினர் நறவம் பருவமில் கோங்கம் பகைமலர் இலவம் நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க 80 மணந்தவை போல வரைமலை எல்லாம் நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும் தொடர்ந்தும் விடியல் வியல்வானம் போலப் பொலியும் நெடியாய், நின் குன்றின் மிசை! - நெடியோனே! நின் குன்றத்தின் பக்கமலைச் சாரல்களிலே பச்சிலைச் செடிகள் மென்மையான துளிர்களைத் துளிர்த்திருக் கும். மகளிரின் வாயிதழ்களைப் போன்ற செவ்வியுடனே ஆம்பற்பூக்கள் மலர்த்திருக்கும். மணத்தோடு குலைகுலையாகப் பூத்த செங்காந்தள் மலர்கள் மகளிரின் கைவிரல்களைப்போல விளங்கும். பஞ்சாய்க்கோரைகள் நல்ல இதழ்களுடன் தொகுதி தொகுதியாகக் காணப்படும். எரியையொத்த பூக்களுடன் வேங்கை மரங்கள் விளங்கும். தோன்றிப் பூக்கள் மிக்க அழகுடன் பூத்திருக்கும். முகிழ்த்த பூங்கெத்துகளைக் கொண்டதாக நறவம் விளங்கும். பூக்கும் பருவம் என்றில்லாது, எப்பருவத்தும் பூக்கும் கோங்கமும் பூத்திருக்கும். பகைத்துச் சினந்தாரின் கண்களை யொத்த சிவப்புடன் இலவ மலர்கள் விளங்கும். தெற்றிக் கட்டியவையும், கோத்துக் கட்டியவையும், தொடுத்துக் கட்டியவையுமான மலர் மாலைகளைப்போல மலர்கள் விளங்கும். பல வண்ண மலர்கள் தம்முட் கலந்தவாயும் தொங்கல் தொங்கலாக அமைக்கப்பட்டவை போலவும் எப்புறத்தும் விளங்கும். இவ்வாறு மலைச்சாரல்களுள் எவ்விடத்தும்