பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ပ္၏မ္ယန္ဓေါဓေ * ၈၈၈မ (ဧဝ) 183 நீதான், இக்குன்றத்து ஒரு பக்கத்தே, கடம்பினிடத்தே - அமர்ந்து அழகுற விளங்கும், அந்தச் சிறப்பினைப் போற்றிப் பாடினேம். எம்மோடும் ஒன்றுபட்டுள்ள, நின்னை விரும்பும் எம் சுற்றத்தாரோடும் தொழுது போற்றினோம். பெருமானே! எம்மையும் காத்தருள்வாயாக! சொற்பொருள் : பிணா - பெண் ஒலியல் - தழைமாலை படை வேற்படை அது பவழக்கொடி நிறங் கொண்டது. செந்நிறப் பொருள்களின் எதிரொளியால் முற்றா விரிசுடர் இளஞாயிறு. தெவ்வு - பகை உடங்கமர் ஆயம் - தாமும் விருப்போடு உடன்பட்டு வந்து பணியும் சுற்றத்தார். விளக்கம் : அடியவர்க்கு இன்ப நல்வாழ்வும், முடிவில் துறக்கப் பெருவாழ்வும் தருகின்றவன் கடம்பமர் வேலனே என்று வலியுறுத்துகின்றது. இப்பாட்டு, பரங்குன்றத்தின் சிறப்பையும்; பாண்டியனின் முருக பக்தியையும் இதனாற் காணலாம். .. இருபதாம் பாடல் . . . வையை(2) - - பாடியவர் : ஆசிரியர் நல்லந்துவனார்: பண் வகுத்தவர் : ஆசிரியர் நல்லச்சுதனார்; பண்: காந்தாரம் ஆகும். - கார்காலம் தொடங்குவதற்கு முன்னர் மீண்டு வந்து சேர்வேன்' என்று உறுதிகூறிப் பிரிந்து சென்றான் தலைவன் ஒருவன். கார்காலம் தொடங்கும்வரை தலைவி ஒருவாறாக ஆற்றியிருந்தாள். கார்காலம் தொடங்கியதும் அவள் துயரம் மிகுந்தது. அவளது நிலையைக்கண்ட தோழி மிக அஞ்சினாள். பாணனைத் தலைவனிடம் தூது விடுத்தாள். . . . - . தலைவனிடம் சென்று சேர்ந்தான் பாணன். நீ பொய்த் தாய்; அதனால் நின் தலைவி வாடி நலிவடைந்தாள்’ என்று அவன் கூறவில்லை. வையையின் புதுநீர் வரவையும், அதனாற் களிகொண்ட மதுரை மாந்தர் நிலையையும் உரைக்கின்றான். அதனைக் கேட்ட தலைவன்பால் தலைவியின் நினைவு எழுகின்றது. தான் பொய்த்த வாக்கும், அதனால் அவள் அடையும் துயரப் பெருக்கமும் எழுகின்றது. அவன், உடனே தன்னுராகிய மதுரையை நோக்கிப் புறப்பட்டு விடுகின்றான். பாணனின் சொல் நயத்தைக் காட்டுவதுடன், மதுரை மாந்தரின் களிகொண்ட நிலையையும் காட்டுகின்றது இப் பாடல் மணஞ்சிறந்த பொதுநீர் கடல்குறை படுத்தநீர் கல்குறைபடவெறிந்து உடலேறு உருமினம் ஆர்ப்ப மலைமாலை