பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் வையை (20) 189 . . . சொற்பொருள் : புகைவகை - அகில் முதலியன. தைஇ அணிந்து பூங்கோதை - அழகிய தலைமாலை. நல்லார் மகளிர். தார் - மாலை, சூட்டு உச்சிச் சூட்டு வளையம் - வளைவான மாலை. அமர் - விருப்பம். அயலயல் - அடுத்தடுத்து. அணி அணிகளின் செவ்வி இடுவளை இடுதற்குரிய் வளை. கெடுவளை - கெட்டுத் தொலைந்து போனதென்னும் வளை. மாற்றாள் - பரத்தை தலைவிக்கு மாறாகத் தலைவனுக்கு இன்பந்தருதற்கு வாய்த்தவள். சமழ்ப்பு - வெட்கம், சகரத்தை முதலிற் கொண்ட பழஞ்சொல் இது. செரு போர்; செருச்செய்த வாளி என்றது, அதன்பாற் படிந்த குருதிக்கறையாற் சிவந்ததன்மை நோக்கி, இதழ் - இமை, நேரிதழ் உண்கணார் நிறைகாடாகப் பரத்தை அதனுட் புகுந்து ஒடி ஒளிந்தாள் என்க. o விளக்கம் : சுவையான காட்சி இது தலைவர்கள் இவ்வாறு தம் மனைவியரின் அணிகளை, அவரறியாமற் பரத்தையருக்குக் கொணர்ந்து தருவர் என்பதும், பின்னர் அவர் அவற்றைத் தேடுங்கால், அவை காணாமற் போயிற்றென்று பொய்கூறி மறைப்பர் என்பதும் இதனாற் காணப்படும். பரத்தையரின் மோகத்தால் இவ்வாறு நிலையழிந்து பொருந்தாச் செயலில் ஆடவர் ஈடுபடுகின்ற மனப்போக்கையும், பின்னர் அதுதான் வெளிப்படுங்காலத்து, அவர் நாணிநிற்கும் நிலையையும் காட்டு கின்றது இப் பகுதி. - - திகைத்தாள் தலைவி! என வாங்கு, ஒய்யப்போ வாளை உறழ்ந்தோளிவ் வாணுதல் வையை மடுத்தாற் கடலெனத் தெய்ய நெறிமணல் நேடினர் செல்லச் சொல்லேற்று செறிநிரைப் பெண் வல்லுறழ்பு யாது தொடர்பென்ன மறலினாள் மாற்றாள் மகள்; 45 வாய்வாளா நின்றாள் - செறிநகை சித்தம் திகைத்து; - இவ்வண்ணமாக ஒடி ஒளியச் சென்றாளான அப் பரத்தையை, அவளை அச்சுறுத்திய பெண்கள் அப்படியே விட்டுவிடவில்லை. இவள் தலைவிக்கு மாற்றாள்; இவட்கு அறிவு புகட்டல் வேண்டும் எனக் கருதினர். அவளைத் தாமும் தொடர்ந்து சென்றனர். ஒளியமைந்த நெற்றியினளான அப் பரத்தையும் விரைந்து சென்றுகொண்டேயிருந்தாள். இவர்களும் அவளைத் தேடிச் சென்றனர். வையையாற்றிலே வெள்ளம் கடல்போலப் பெருகி வந்தமையால், கரைகடந்து சென்று, அதனால் அறல் படிந்துள்ள கரையோரத்து மணற்பாங்கிலே 40