பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 . . . பரிபாடல் மூலமும் உரையும் அகன்ற மென்தோள்களைத் தொட்டுக் கட்டி, அவர்களுள் நினக்குப் பொருள்தரும் செல்வாக்கு, நின் இளவிரல்களால் யாழினை இசைத்து அவர்களை இன்புறுத்துபவளே! அவ்வாறு இன்புறுத்தும் காலத்தே எம் தலைவியின் வளையலும் மாலையுமாகிய அணிகளை அணிந்து கொண்டு அவர்க்கு நீயும் இன்பம் ஊட்டுவாய்; இன்பத்தை அளிப்பதில் வையைத் துறையைப்போல ஆடவர் அனைவருக்கும் ஆடுதற்குரிய பொதுவான இன்பத் துறையாக விளங்குபவளே! - “எம் தலைவனாகிய உழவு எருது காணாமற் போயிற்று. பொய்தல் விளையாட்டு விளையாடும் இம் மகளிர் தம் கண்ணாற் காணுமாறு அதனை இழுத்து வருவோம். இவ் வையையாகிய தொழுவத்தே கொண்டு சேர்ப்போம். அதனை அதட்டியும் அடித்தும், எம் மாலையே சாட்டையாக்கொண்டு மோதியும் எம் வசமாக்குவோம், அதனைக் குறித்தே நின்னைப் பின்பற்றி வந்தோம். எருது, தன் தொழிலாகிய உழவைச் செய்யாதே ஒடுமானால், அதனை ஒடிப்போகட்டும் என்று விட்டுவிடும் கடமை வேளாளர்க்குக் கிடையாது. அதனைப் பற்றி வணங்கி மீண்டும் உழவிற் செலுத்துவதே அவர் செயற்குரிய கடனாகும். அதுகுறித்தே யாமும் தொடர்ந்து வந்தேம். தம் மார்பையே தன் கணவனுக்குத் தண்டமாகத் தருகின்ற சீர்மையுடைய முத்தாரத்தாள் எம் தலைவி. அவள் மார்பும், நின் மார்பும் ஒருபடியாக ஒப்புடையனவாகுமோ? என்றிவ்வாறு பேசினாள். இதற்கு முன்பாகவே, அவர் களால் தேடிப் பின்தொடரப்பட்டவளாகிய பரத்தை தலை வியை ஏசினாள். அதனைக் கேட்ட மகளிருள் சிலர், அவள் பாற் சினம் கொண்டனர். வையைக் கரையிடத்தே இவை எல்லாம் நிகழ்ந்தன. "இவள் பெயரை நினைத்தாலே பிறரின் பாவப்பிணிகள் தீரும். அத்தகு கற்புடையாள் இத் தலைவி, இவளைச் சினந்து எதுவும் உரையாதே. இவளைக் குறித்துக் கொடிய சொற்களைக் கூறிய நீதான் அறியாமை உடையவளாயினை இளமயிலின் சாயலை உடையாளான இவளை வணங்கி, மன்னிப்பு பெறுதற்கு வருக" என்று, அவர் அப்பரத்தைபாற் கூறினர். “இதுவோ மனத்தே கொண்டு வெதும்பும் நோய் ஆகும். வேற்றாரை வேற்றார் தொழுதல் என்பது இழிவாகும்” என்றாள் "தாயே! மாற்றாளை மாற்றாள் வணங்குவது என்பதும் உயர்வில்லைதான். உயர்ந்தவளே! இப்பரத்தையின் பேச்சை - .