பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 - _uńunt-fi, gpogpb a-coruń காற்றின் கடிமணம்! வண்டார் பிறங்கல் மைந்தர் நீவிய தண்கமழ் சாந்தம் தைஇய வளியும், கயல்புரை கண்ணியர் கமழ்துகள் உதிர்த்த புயல்புரை கதுப்பகம் உளரிய வளியும், உருளினர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த 50 முருகு கமழ்புகை நுழைந்த வளியும், * * அம்ைபும் அருவி அருவிடர்ப் பரந்த . . . பனம்பூண் சேஎய், நின் குன்றம்நன் குடைத்து; வண்டினம் ஆரவாரத்துடன் மொய்த்தபடியிருக்கும் மாலைகளை அணிந்தோரான, மலையொத்த தோள்களைக் கொண்ட ஆடவர்கள், தம் மார்பிடத்தே பூசியிருந்த, குளிர்ந்த மணம் கமழும் சந்தனச்சாந்திலே படிந்து வருகின்ற காற்றும் - கயல்மீன்களைப் போலப் பிறழும் கண்களை உடையோ ரான மகளிர், மேகம்போலுங் கருமையான தம் கூந்தலிடத்தே மணங் கமழும் மணப்பொடிகளை உதிர்த்திருக்க, அக்கூந்தலின் உட்புகுந்து, அப்பொடிகளினூடாக ஊடாடி வந்த காற்றும் - உருளான பூங்கொத்துக்களைக் கொண்ட கடம்பிலே எழுந்தருளுகின்ற நெடுவேளாகிய பெருமானுக்கு எடுத்த வெறியாட்டிடத்தே நின்றும் எழுந்த, மணங்கமழும் நறும் புகையினூடாக நுழைந்து வந்த காற்றும் - . . . பசும்பொன் அணிகளணிந்த சேயோனே! ஒழுகிக் கொண்டிருக்கும் அருவிகளையும், அடைதற்கரிய மலைக்குகை களையும் உடைய நின் குன்றிடத்தே, மிகுதியாக எப்போதும் வீசிக் கொண்டிருக்கும். - - - சொற்பொருள் : பிறங்கல் - மலை , மலையொத்த தோள்கள். மைந்து - வலிமை மைந்தர் - வலிமையாளர்; இளைஞர். நீவிய தடவிய. கயல் கெண்டை மீன்; இது பிறழும் தன்மையது. தண்கமழ் சாந்தம் - குளிர்ந்த மணத்தைப் பரப்பும் சந்தனம் கதுப்பு கூந்தல் உளரிய நுழைந்து வந்த நெடுவேள் - முருகப் பிரான். வேள் விரும்பப்படுகின்றவன். முருகு நறுமணம்; நறுமணப் பொருள்களான அகில் முதலியன. அசும் புதல் - தொடர்ந்து வீழல். விடர் - மலைக்குகை. - விளக்கம் : மழைபெய்தலால் பல்வேறான இம் மணங் களுடன் ஊடாடிப் புகுந்து வரும் காற்றானது, இவையனைத்துங் கலந்த புதிதான ஒரு கலவை நறுமணம் கொண்ட தாக விளங்கிற்று என்க. -