பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வின்_வ்ெவேள்வத்துை 203 புனல் தழுவும்! தாழ்நீர் இமிழ்சுனை நாப்பண் குளித்தவண் மீநீர் நிவந்த விறலிழை கேள்வனை 40 வேய்நீர் அழுந்துதன் கைதயின் விடுகெனப் h பூநீர்பெய் வட்டம் எறியப்; புணைபெறாது அருநிலை நீரின் அவள்துயர் கண்டு கொழுநன் மகிழ்தூங்கிக் கொய்பூம் புனல்வீழ்ந்து தழுவும் தகைவகைத்துத் தண்பரங் குன்று; 45 கார்காலத் தொடக்கத்தின் சிறப்புக்களை மேலே கண்டோம். இனி மழை பெய்ததும் நிகழும் சில காட்சிகளையும் காண்போம். - கீழ்நோக்கிப் பாய்ந்து வருகின்ற காட்டாற்றின் நீரானது, ஒலியோடு வீழ்ந்து கொண்டிருக்கும், சுனையொன்றின் நடுப்பக் கத்தே ஒருத்தி குளித்துக் கொண்டிருந்தாள். சிறந்த அணிகளைப் பூண்டவளான அவள், நீர்மேலாக எழுந்து, கரை யிலிருந்த தன் கணவனை அழைத்தாள். நீரிடத்தே கை சோர்ந்து அமிழப் போகும்தன்கையின் அருகாக மூங்கிற்புணையினைத்தள்ளிவிடுக என்று வேண்டினாள். அவனோ, சாயநீர் பெய்து நிரப்பப்பெற்ற வட்டத்தை அவள்மீது எறிந்தான். புணை கிடைக்கப்பெறாது, நிலைகொள்ளுதற்கு அரிதான ஆழத்தை யுடைய நீரிடத்தே அவள் மூழ்கித் தவித்துக் கொண்டிருந்தாள். அதனைக் கண்டான் 14 அவன். அவள் கணவாகிய அவன் உள்ளத்திலே, மிகுந்த களிப்பு எழுந்தது. அவன், தானும் நீரிற் குதித்தான். அவளைத் தழுவித் தூக்கிக் கரைசேர்த்தான். அங்ங்னம் தவித்துக் கொண்டிருந்தாளான ஒருத்திக்கு, அந்நிலையே கணவன் தழுவிக் காப்பாற்றும் தன்மையைப் போலத் துயருற்ற அடியவரின் துன்பங்களைப் போக்குவது தண்ணிய பரங்குன்றமே ஆகும். சொற்பொருள் : தாழ் நீர்-கீழ் நோக்கிப் பாயும் காட்டாற்று - மழைநீர்,நாப்பண்-நடுவிடம்.மீநீர் நிவந்த-நீரின் மேலாக எழுந்த விறல் - வெற்றி வேய் = மூங்கில், மூங்கிற்புணை, மகிழ் தூங்கல் - களிப்பு மிக்கெழுதல் கொய்பூம் புனல் - பூக்களைக் கொய்து கொண்டு, அதனால் அழகுற்றிருக்கும் புதுப் புனல் - விளக்கம் : நீரில் அழுந்திச் சாவேமோ என்றவளவில் துயருற்றவளுக்குக், கணவன் அணைத்து எடுத்தபோது, உயிர் பிழைத்த இன்பத்தோடு, அந்த அணைப்பின் களிமகிழ்வும் ஒன்று சேர்ந்து பேரின்பத்தைத் தரும். இவ்வாறே முருகனை நாடிப் பரங்குன்றை அடைபவர். தம் துயரினின்றும் விடுபட்டு உய்வதோடு, தாம் நிலையான பேரின்பத்தையும் பெற்றுச் சிறப்பார்கள் என்பதாம்.