பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்ட்செவ்வேள் வாழ்த்து (2உ 205 அம்பும் கண்களும் கண்ணொளிர் திகழடர் இடுசுடர் படர்கொடி மின்னுப்போல் ஒண்ணகை தகைவகை நெறிபெற இடையிடை . . இழைத்தியாத்த 55 செண்ணிகைக் கோதை கதுப்போ டியல மணிமருள் தேன்.மகிழ் தட்ப வொல்கிப் பிணிநெகிழ் பைந்துகில் நோக்கம் சிவப்பூரப் பூங்கொடி போல நுடங்குவாள் ஆங்குத்தன் - . சீர்தரு கேள்வன் உருட்டும் துடிச்சீரால் 60 கேர்டணிந்த முத்தாரம் ஒல்க ஒசிபவளேர் ஆடை யசைய அணியசையத் தானசையும் வாடை உளர் கொம்பர் போன்ம்; வாளி புரள்பவை போலும் துடிச்சீர்க்குத் தோளுழ் பெயர்ப்பவள் கண், . . . . . . 65 கண்ணிடத்தே ஒளியோடு விளங்கும், பொற்றகட்டி னிடையே இட்டமைத்த, ஒளிபரப்பும் மின்னுக்கொடி போல விளங்கும், ஒள்ளிய நகையின் கூறுபாடுகள் அனைத்தும் முறையோடு விளங்க, இடையிடையே இரத்தினக்கற்களை இட்டுக் கட்டிய அலங்காரத்தைக் கொண்டாளான ஒருத்தி, ஆடிக் கொண்டிருந்தாள். செம்மணியைப் போல நிறம்பெற்று விளங்கும் மதுவை யுண்ட களிப்பினாலே அவள் நடனம் தடைப்பட அவளிடத்தே தளர்ச்சி தோன்றியது. அவள் உடுத்திருந்த பசுந்துகிலின் பிணிப்பு நெகிழத் தொடங்கிற்று. அவள் கண்கள் செந்நிறத்தைப் பெற்றன. காற்றினாலே அசைக்கப்பெற்று ஆடுகின்ற பூங்கொடியைப் போல அவள் நிலைகெட்டு அசைந்தாடிக் கொண்டிருந்தாள். அங்குத் தன்னுடைய சிறப்புமிகுந்த கணவன் அடித்துக் கொண்டிருக்கும் துடியின் தாளக்கட்டிற்குப் பொருந்த, மலையுச்சிகளைப்போல விளங்கிய தன் மார்பகங்களின் மேலாக முத்தாரங் கிடந்து அசைந்தாட அவள் மேலும் மேலும் ஆடிக்கொண்டிருந்தாள். அந்த அழகுதான் என்னே ஆடை அசையவும், அணிகள் பலவும் அசையவும், தானும் சேர்ந்து அசையும் அவளுடைய அந்த நிலையானது, வாடைக் காற்றின் மோதுதலினாலே அசைந்தாடிக்கொண்டிருக்கின்ற ஒரு பூங்கொம்பினைப் போலத் தோன்றியதே. துடியினின்றும் எழுந்த தாளத்தின் அமைதிக்குப் பொருந்த அவள் முறையாகத் தோள் பெயர்த்து ஆடினாள். அவ் வேளையிலே அவள் கண்கள்.அம்பினை முனைப்பகுதி புரள்வது போலத் தோன்றினவே! . . . . . . . -