பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 - பரிபாடல் αρουφώ உரையும் சொற்பொருள் : அடர் - பொற்றகடு. மின்னுக்கொடிமின்னர்கிய கொடி தகை - தகைமை நெறி முறைமை கூந்தலின் நெறிப்பும் ஆகும். கதுப்பு கூந்தல். மணிமருள் தேன் - செம்மணிபோலத் தோன்றும் மது மகிழ் தட்ப மயக்கம் செயலைத் தடை செய்ய துடி உருட்டல் துடியை யடித்துத் தாளவொலி. - . எழுப்பல்; விரலின் அசைவு உருட்டலைப்போல்வது என்க. கோடு - மலையுச்சி. ஒல்க - அசைய. ஒசிதல் - ஒடிந்து வீழ்தலைப் போல வளைந்தாடுதல்; இடையின் அசைவைக் குறித்தது. உளர்தல் - அசைத்தல், வாளி - அம்பு; இங்கே அதன் இலைப் பகுதியைக் குறித்தது. சீர் - தாளம் - இன்றுபோல் இயைக! மாறமர் அட்டவை ; மறவேல் பெயர்ப்பவை: ஆறிரு தோளவை அறுமுகம் விரித்தவை : நன்றமர் ஆயமொடு ஒருங்குமின் அடியுறை இன்றுபோல் இயைகெனப் பரவுதும் ஒன்றார்த் தேய்த்த செல்வநின் தொழுதே! 7Ο நின்பாற் பொருந்தாதவரான அசுரரை அழித்த செல்வக் குமரன்ே மாறு கொண்டோருடன் செய்த போரிலே வெற்றி பெற்ற வீரனே! வெற்றி வேலினைச் செலுத்தும் வேலனே! ஆறிரு தோள்களை உடையவனே! ஆறுமுகங்களும் மலர்ச்சியுடன் அழகுற விளங்கக் காட்சி யளிப்போனே! நன்மையே விரும்புகின்ற எம் சுற்றத்தாரோடும் கூடி ஒன்றுபட்டு, நின் குன்றிடத்திற்கு வந்து, நின் அடியுறையும் வாழ்வாகிய இந்த இன்ப வாழ்வு இன்றைக்குப் போலவே என்றைக்கும் எமக்குப்பொருந்துவதாக என, அதற்குநின்னருளை வேண்டியவராக, நின்னடிகளைத் தொழுது போற்றுகின்றோம். பெருமானே! அந்தச் சிறந்த பேற்றினை எமக்குத் தந்தருள்வாயாக! சொற்பொருள் : மாறு பகை மறவேல் வீரவேல். நன்று - நன்மை, அமர்தல் விரும்புதல். ஒன்றார் - பொருந்தி' வழிபட்ாதார்; பகைத்தார். - - விளக்கம்: எழிலார் குன்றத்து உறையும் குமரப் பெருமான். நமக்கு வந்துறும் துயரங்களையும் போக்கி, நம் வாழ்வையும் எழில்பெறச் செய்வான் என்பதாம். திருப்பரங்குன்றத்தைச் சென்றடைந்ததும் மக்களின் துன்ப நினைவுகள் மறைகின்றன. இன்ப நினைவுகள் அலையலையாக எழுந்து அவர்களை முற்றவும் ஆட்கொள்ளுகின்றன. அவர்கள்