பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - - - பரிபாடல் மூலமும் உரையும் உயிர் முதல்வன் அதனால், - - இன்னோர் அனையை இனையை யாலென அன்னோர் யாம்இவண் காணா மையின் பொன்னணி நேமி வலங்கொண்டு ஏந்திய , - மன்னுயிர் முதல்வனை ஆதலின் 55 நின்னோர் அனையை நின் புகழொடும் பொயிலிந்தே, நீதான் மேற்கூறியவாறு அனைத்துக்கும் ஆதியாகவும், அனைத்தையும் படைத்தும் காத்தும அழித்தும் விளங்கும் முத்தொழிற்கு இறையாகவும் விளங்குகின்றனை அதனாலே, இவ்வாறாக, அனைத்துமாக நீயே அமைந்துள்ளனை ஆதலின், நீதான் 'இத்தன்மையை’ என ஒப்பிட்டுக் கூறுதற்கு, அத்தன்மையாளர் எவரையும் யாம் இவ்விட்த்தே கண்டிலேம். அங்ங்னம் காணாமையினால், அதுவும் எமக்கு இயல்வதில்லை. பொன்மயமான சக்கரப்படையினை வலக்கையிலே தாங்கி உயர்ந்தவனாக, இவ்வுலகத்து உயிர்களுக்கெல்லாம் காவலாக விளங்குபவனே! ஆதலினாலே, நின் பெரும் புகழோடும் அழகுற்று விளங்கியபடி, நினக்கு நீயே ஒப்பானவனாக, நீதான் உயர்ந்து விளங்குகின்றனை! - சொற்பொருள் : இனையை இத்தன்மையை. பொன் பொன்னிறம். நேமி - சக்கரம். வலம் வலக்கரம். முதல்வன் - தலைவன் ஆதிகாரணன். - - விளக்கம் : திருமாலின் அனைத்துமாகி, அனைத்தையும் பேணிப் புரந்து காத்தருளும் ஒப்பற்ற காத்தல் தன்மையை வியந்து போற்றுகின்றனர். மன்னுயிர் முதல்வன் ஆதலின், எம் செயலுக்கும் முதல்வனாக அமைந்து நின்று, எம்மையும் காத்தருள்வானாக என்பதுமாம். . . . - - புகழ் எழில் நின்னொக்கும் புகழ் நிழலவை; பொன்னொக்கும் உடையவை; புள்ளின் கொடியவை; புரிவளையினவை; எள்ளுநர்க் கடந்தட்ட இகல் நேமியவை; 60 மண்ணுறு மணிபாய் உருவினவை; - எண்ணிறந்த புகழவை; எழில் மார்பினவை; திருமாலே! நின் புகழாகிய ஒளியும் நின்னைப் போன்றே பெருஞ்சிறப்பு உடையதாகும். நின் உடை பொன்னைப் போன்று ஒளிவீசுவதாகும். நின் வெற்றிக்கொடி கருடப் புள்ளினைக் கொண்டதாகும். உள்நோக்கிச் சுரிந்த வெற்றிச் சங்கினையும், இகழ்ந்தாரைக் கொன்று வெற்றிபெற்ற வலிமை கொண்ட