பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s uလ်)မ္ဘီဒီးဇီးါဒ၏၊ * பரிபாடற் பகுதிகள் (1) - ... - 215 உழைப்புத் திறனால், பதி அறத்தில் திரியா நிலை பெற்றது அந்தணரின் ஒழுக்கச் செவ்வியால், மழையின்றேல் இவை யெல்லாம் நிகழா என்பதும் இங்கே அறிதல்வேண்டும். அந்தணரின் ஒழுக்கம் மற்றைப் பிறராலும் எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படுவ்து ஆகலின், அவரின் நெறிபிறழா நேர்மையைக்' கூறினார்; அதனால் பதி அறத்தில் திரியாதிருந்த சிறப்பையும் கூறினார். அந்தணர் தம் ஒழுக்கில் திரியவே, அவரையே எடுத்துக் காட்டாகக் கொண்டொழுகும் பிறபிற மாந்தரும் தத்தம் ஒழுக்கங்களில் திரிவர். அதனால், உலகே அறம் பிறழ்ந்துபோம் என்பதும் கருதுதற்குரியது, இதனாலேயே, அவர் நிறையோடு ஒழுகுதலால் பதியுள்ளார் அனைவரும் அறத்திற் றிரிவாற்றா ராயினர் என்றனர். - - இன்பம் இயல் கொள்ளும் , ஆங்கொருசார், உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை மண்ணுவ மணிபொன் மலைய கடல பண்ணிய மாசறு பயந்தரு காருகப் புண்ணிய வணிகர் புனைமறுகு ஒருசார்; 25 விளைவதை வினையெவன் மென்புல வன்புலக் களமர் உழவர் கடிமறுகு பிறசார்; . . . ஆய்க, அனையவை நல்ல நணிகூடும் இன்பம் இயல்கொள நண்ணியவை; . (இது கொண்டு நிலை) - இருந்தையூர் என்பது அக்காலத்தே மிகவும் செழுமை யான ஒர் ஊராகத் திகழ்ந்தது. அதன் கடைத்தெருக்கள் பற்பல வகையான பொருள்களின் மிகுதியாலும், வளமையோடு திகழ்ந்தன. அதனைக் கூறுகிறது இப்பகுதி . உணவுக்காகும் உணவுப் பொருள்கள், பூசுவதற்குரிய மணப்பொருள்கள், பூண்பதற்குரிய அணிகல வகைகள், உடுப்பதற்கான உடை வகைகள், தூய்மை செய்வதற்கான பொருள்கள், மணிவகைகள், பொன்அணிகள், மலையிலிருந்து கிடைக்கும் மலைபடு பொருள்கள், கடலிலிருந்து கிடைக்கும் கடல்படு பொருள்கள், செய்வினைத்திறனோடு செய்த குற்றமற்ற பயன்தரும் நெசவுத்தொழிற் பொருட்கள் ஆகியவற்றை, புண்ணியங்கருதி விலைப்படுத்தும் வணிகமாக்கள் சிறப்போடு விளங்கும். கடைவிதி, நகரின் ஒரு பக்கத்தே விளங்கியது. (இவற்றைத் தனித்தனியாக விலைப்படுத்தும் தனித்தனிக் கடைத் தெருக்கள் இருந்தன என்பதும் மிகப் பொருந்தவதாகும்.) - - மென்புலம் என்பது மருதமும் நெய்தலுமாகிய நிலப்பகுதி: வன்புலம் என்பது முல்லையும் குறிஞ்சியுமாகிய நிலப் பகுதி.