பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 - பரிபாடல் மூலமும் உரையும் இவற்றுள், தாமாகவே விளையும் பெர்ருட்களைச் சேகரித்துக் கொணர்ந்து, பிறருக்குப் பயன்பட விற்போர் களமர் ஆவர். இஃதன்றி, உழுது வித்திப் பயன் கொள்வோர் உழவர் ஆவர். இவ்விரு சாராரான உழைப்பாளர்களும் வாழ்கின்ற சிறந்த தெருக்களும் நகரின் பிறிதொரு புறத்தே விளங்கின. - இவ்வாறாக, இத்தகைய வளங்களாலே நன்மை மிகுதியும் பொருந்துதலினாலே, இன்பமானது தன் இயல்போடு திரிதலற்று விளங்க, அனைத்தும் பொருந்திய சிறப்புடன் விளங்கிற்று சொற்பொருள் : உண்ணுவ கூலமும் பிறவுமான உணவுப் பொருள்கள். பூசுவ மணப் பொருள்கள்: சாந்தமும் பிறவும். உடுப்பன துணி வகைகள். மண்ணுவ தேய்த்துக் குளிப்பதற் குரிய பொருள்கள், காருகர் ஆடை நெய்வோர். களமர் தாமாக விளையும் பொருட்களை முயன்று சேகரிப்போர்; இவரும் உழவுத் தொழில் செய்வர்; ஆயின், தாமே உழவராக அன்றித் தாம் தொழிலாளராகவே திகழ்வர் உழவர் - உழவே தொழிலாக உடையோர். புண்ணியம் - பாவத்திற்கு எதர்மொழி; புண்ணிய வணிகர் என்றதனால் அறம் பிறழாது கொண்டும் விற்றும் வரும் வணிகர் என்பதாம். - - - விளக்கம்: இன்பம் இயல்கொள’-இன்பமானது களிநடம் புரிய என்பதுமாம். பொருள்கள் எல்லாம் குவிந்திருப்பதாலும், அவற்றை விலைப்படுத்துவோர் புண்ணிய வணிகர் என்பதனாலும், மக்கள். நல்வாழ்வு வாழ்வாராயினர். அதனால், இன்பம் இயல்கொளப் பதியும் சிறப்புற்றது என்க. இவற்றுக்கு மூலமாக அமைவது மழைவளம் என்பதும் கருதுக, மக்களது அறத்தில் திரியா மாண்மையும் நினைக்க துறக்கம் புரையும் நகர் வண்டு பொரேரென எழ வண்டு பொரேரென எழும் கடிப்புகு வேரிக் கதவமில் தோட்டிக் கடிப்பிகு காதில் கணங்குழை தொடர மிளிர்முன் வாய்ந்த விளங்கொளி நுதலார் ஊர்களிற் றன்ன செம்ம லோரும் - 35 வாயிருள் பனிச்சை வரிசிலைப்புருவத்து - ஒளியிழை ஒதுங்கிய ஒண்ணுத லோரும், புலத்தோ டளவிய புகழணிந் தோரும் நலத்தோடளவிய நாணணிந் தோரும் . . விடையோ டிகலிய விறல்நடை யோரும் 40 நடைமட மேவிய நானணிந் தோரும்