பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-திருமால் வாழ்த்து (1) . . . - 15 சக்கரப்படையினையும் உடையோனே! கழுவப் பெற்ற நீலமணி யைப் போன்று ஒளிபரப்பும் நீல மேனியனே! எண்ணிறந்த புகழினை உடையோனே! எழில் அமைந்த மார்பினைக் கொண் டோனே! - . . சொற்பொருள் : புகழ் நிழல் - புகழாகிய அருள் நிழல். புள்கருடப்புள். மண்ணுதல் - கழுவுதல்; சாணை பிடித்தல். பட்டை தீட்டல், மணி - நீலமணி. *. விளக்கம் : தீமையை அழித்து வென்று. உயிரினத்தைக் காப்பவன் ஆகிய திருமாலின் படை, கொடி, சங்கம் முதலிய வற்றின் சிறப்புக்களைக் கூறி அவனைப் போற்றுகின்றனர். - - பரவுதும் யாமே! - • | ஆங்கு, . . " காமரு சுற்றமோ டொருங்குநின் அடியுறை யாமியைந்து ஒன்றுபு வைகலும் பொலிகென 65 ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் வாய்மொழிப் புலவ! நின் தாள்நிழல் தொழுதே! அவ்விடத்ததாக, - மெய்ப்பொருள் உரைப்பவான வேதங்களை உரைத் தருளிய புலவனே! நின் தாழ் நிழற்கண்ணே வாழ்பவர்யாங்கள். நின்னை விரும்பும் அடியார்களாகிய அத்தொண்டர் குழாத்தின ரோடும் யாங்களும் ஒருங்கே கூடியவராக அமைதல் வேண்டும். இன்பம் நிறைந்த உள்ளத்தேமாக நின்தாள் நிழலாகிய அக் கருணைவெள்ளத்தைத் தொழுது போற்றியவராக விளங்கல் வேண்டும். யாம் நின்னடிக்கண்ணே பொருந்தி ஒன்றுபட்டு நாளும் நல்வாழ்வு பெற்றுத் திகழ்வேமாக, இவ்வாறு வேண்டிய வராக, நின்னைப் பரவுவேம் பெருமானே! எமக்கும் அதனைத் தந்து அருள்வாயாக po - சொற்பொருள் : காமரு சுற்றம் - விரும்பத் தகுந்த சுற்றம்; அடியவர் கூட்டம். அடியுறை அடிக்கண் வாழ்வார்; அடிமைகள். வைகலும் நாள்தோறும், ஏம் - இன்பம் வாய் மொழி - மறை. விளக்கம் : நின் தாள்நிழலாகிய அருள்நிழலில் நின்று, இன்பவாழ்வைப் பெறுவோம்; எமக்கும் அதனைப் பெறுவதற்கு அருளிச்செய்வாயாக என்பதாம். அவனருளின்றி அவனைத் . தொழுது பயன்பெறுதல் என்பதும் இயலாதாகலின், முதற்கண் அதற்கான அவனது அருள்நோக்கினைத் தந்தருளுமாறு வேண்டுகின்றனர். -