பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பரிபாடல் மூலமும் உரையும் களையும் உடையவரான, அறத்தைக் காத்துப் பேணும் உத்தம மனைவியராகிய கற்புடைப் பெண்டிர் பலரும் இருந்தனர். இருப்பினும் அவர், மணியணிந்த தம் உரிமைமாந்தரோடு புனலாடி மகிழ்ந்தனர் அன்று. அவர்தம் இல்லிடத்திலிருந்து வாடி நலிய, அவர் கணவர்மார் தாம் விரும்பிய பரத்தையரோடு புதுப் , புனலாடிக் களித்தனர். வையைப் புனல் அவ்வாறு அறமகளிர் ஆடாதேயே போய்க் கழிந்தது. (இதுரு தோழி கூற்று, தலைவனின் செயலைக் குறித்துப் பழிக்கின்றனள்) சொற்பொருள்: பணிவில் உயர்சிறப்பு பிறர்க்குப்பணிதல் அற்ற உயரிய சிறப்பு பஞ்சவன் - பாண்டியன், ஐந்து பகுதியாக விளங்கியபாண்டிய நாட்டின் தலைவன். மணி-நீலமணி, உரிமை மைந்தர் - காதற் கணவர். தணிவின்று - கழியவில்லை. - விளக்கம் : காதற் பரத்தையும் சேரிப் பரத்தையும் தலைவனின் அன்புகுறித்துத் தமக்குள் பூசலிடத், தலைவன் அவர்களுடைய அந்த உறவிலே இன்புறுகின்றான்; அன்றித் தன் இல்லாளோடு சென்று இன்புற்றான் அல்லன்; அந்தச் செயலின்றியே வையைப் புனலும் போய்க் கழிந்தது என்பதாம். ஊடாளோ? புனலோடு போவதோர் பூமாலை கொண்டை எனலூழ் வகை எய்திற்று என்றேற்றுக் கொண்டை புனலூடு நாடறியப் பூமாலை யப்பி - நினைவாரை நெஞ்சிடுக்கண் செய்யும் கனல்புடன் கூடாமுன் ஊடல் கொடியதிறம் கூடினால் 55 ஊடாளோ ஊர்த்தலர் வந்துர்ந்து; - "புதுப்புனலோடு போவதாகிய ஒரு பூமாலையானது என் கொண்டையிடத்தே ஊழ்வகையினாலே வந்துஅடைந்தது! அதனை அவ்வாறே யானும் சூட்டிக் கொண்டேன்; அதற்கு உரியவனையும் ஏற்றுக் கொண்டேன்” என்று, நீராடியவர் அனைவரும் அறியும்படியாக, அப் பரத்தையானவள், அதனை எடுத்துத் தன் கொண்டையிற் சூடிக் கொண்டாள். அவள் செயல் அத் தலைவனைப் பிரிந்து நினைந்திருப்பாரை எல்லாம் நெஞ்சிடத்தே துன்பஞ் செய்யும் கொடுமையான செய்தி யாயிற்று. அவன் அப் பரத்தையைச் சென்று கூடுவதற்கு முன்பாகவே, அவளது அச்செயல் ஊர்முழுவதும் பரவி அலராயிற்று. இக் கொடிய செய்தியைக் கேட்டால், அவன் தலைவியும் ஊடாளோ? ஊரிடத்தே பரவிய பழிச் சொற்கள் தலைவியின் காதுக்கும் சென்று அடைந்தன. அதனாலே, -