பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 - பரிபாடல் மூலமும் உரையும் பாடிய சான்றோர்கள் (எண் - பாடல் எண்) கீரந்தையார் - 2 ‘ இப்பெயருடையவராக, இவரன்றி, மற்றும் இருவரையும் நாம் சங்கநூற்களுள் பயின்றுவரக் காண்கிறோம். ஒருவர். இடைச்சங்கத்துப் புலவராக வீற்றிருந்தவர்; மற்றொருவர், பொற்கைப்பாண்டியன் கைதுணிக்கக் காரணமான பார்ப்பனி யின் கணவர். இவர்கள் மூவரும் மூவேறு காலத்தவர்; எனினும், ஒரே குடியச் சேர்ந்தவர்களாக இவர்கள் உரைக்கப்படுகின்றனர். இதனாற் கீரந்தை' என்பது பழங்காலத் திருந்தே வழக்காற்றி லிருந்து வந்த ஒரு தமிழ்ப் பழம்பெயர் என்று கருதலாம். 'சாத்தந்தை' என்பது, சாத்தனின் தந்தை' என்னுமாறு போலக், கீரந்தை' என்பது 'கீரனின் தந்தை' எனப் பொருள்படும் என்பார்கள். இது மேற்சொன்ன காரணத்தால் பொருந்தாத முடிபு என்பதும் விளங்கும். அந்தில், ஆந்தை, அந்துவன் என வழங்கும் பெயர்களைப் போலவே, அந்தை' என்பதும் ஒரு பெயராகக் கொள்ளற்கு உரியது எனலாம், கீரந்தை, சாத்தந்தை, என்பன கீரர் குலத்து அந்தை, சாத்தனாகிய அந்தை எனப் பொருள்தரும் சொற்கள் ஆகும். - - - * இனி, இப் புலவர் கீரர் குடியினர் என்பது வெளிப்படை கீரர் குடியினர் இந் நாவலந்தீவின் வடபுலத்திலிருந்து வந்து, பன்னெடுங்காலத்திற்கு முன்னர்த் தமிழகத்திற் குடியேறிய வராவர். வேளாப் பார்ப்பார் வாளரந்துமித்த எனவரும் வாக்கு, இவர்கள் பார்ப்பனரெனவும், இவர்க்குரிய வேட்டலாகிய கடமையைக் கைவிட்டவர் எனவும், சங்கறுத்தலும், ஆரியக் கூத்தாடலும் ஆகிய கலைத்தொழில்களை மேற்கொண்டு வாழந்தவர் எனவும் காட்டுகின்றது. இத்தொழில்களால் பெற்று. வந்த ஊதியமும் களிப்பும், இவர்களை இத் தொழில்களையே தொடர்ந்து மேற்கொண்டு வாழும்படி செய்தன. இவர்களே, வடபுலத்திருந்து வந்து குடியேறிய ஆரியச் சாதியினருள் முதற்கண் வந்து குடியேறித், தமிழகத்தையே தம்' தாயகமாகக் கொண்ட பழங்குடியினராவர். இவர்களின் பேச்சு முதற்கண் வடமொழியாக இருந்தது; இதன்ாற்றான் வட மொழிக்குக் கீர்வாணம்’ என்றொரு பழம்பெயரும், வடபுலத் திற்குக் கீர்வாண நாடு’ என்ற பழம் பெயரும் தமிழகத்திற் பண்டு முதலே வழங்கலாயிற்று. - - -