பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 - uhum-So "pagpin o-sowula தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ: கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மைநி: ஆறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ: வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ; வ்ெஞ்சுடர் ஒளியும் நீ: திங்களுள் அளியும் நீ; அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; (பரி - 3) எனவும், நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள நின், தண்மையும் சாயலும் திங்களுள - நின், சுரத்தலும் வண்மையும் மாரியுள நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள நின், நாற்றமும் ஒண்மையும் பூவையுள நின், தோற்றமும் அகலமும் நீரினுள நின், உருவமும் ஒலியும் அகாயத்துள நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தினுள அதனால், இவ்வும்.உவ்வும் அவ்வும் பிறவும் ஏம மார்ந்த நிற்பிரிந்து மேவல் சான்றன வெல்லாம் (பரி - 4) எனவும், இவர் ஆழமான தத்துவக் கோட்பாடுகளை நயமாக எடுத்துரைக்கின்றனர். - முருகப்பிரானின் பிறப்பையும், சிறப்பையும் போற்றும் இவரது செய்யுள், புதுமையான பல செய்திகளைக் கொண்டு விளங்கும், சுவை கனிந்த செய்யுள் ஆகும். பன்னிரு கரத் தோனாகிய அவன், தன் கரங்கள் ஒவ்வொன்றினும் ஏந்தியுள்ள பொருட்களையும், அவற்றைத் தத்தம் கூறுகளினின்றும் உரவாக்கித் தந்து பணிந்த தேவர்களின் பணிவையும் இவர் சிறப்பாக எடுத்துரைக்கின்றார். - இனிக் கழார்க்கீரன் எயிற்றியனார் என்னும் புலவரது பெயரைக் காணும்போது, கழார்த் துறையைச் சார்ந்த கீரர் தொழிலினரான எயிற்றியனார் என அமையும். ஆகவே வளையும் மணியும் செய்து விற்கும் தொழிலிலும் இவர்களுட் பலர் ஈடுபட்டிருந்தனர் எனலாம். இந்தத் தொழிலின் சாயலை மட்டும் இன்றும் பாசிமணி விற்கும் குறக்குடியினரிடையே நாம் காணுகின்றோம். & - நல்லந்துவனார் - 6,8,11,20 அந்துவன்’ என்னும் பெயருடையார் இவர் நல்’ என்னும் அடைமொழி இவரது.அறவாழ்வின் செவ்வியை உணர்த்துதற் பொருட்டு அமைந்ததாகும். அந்துவன் சாத்தன், அந்துவன் கீரன்,