பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் பாடிய சான்றோர்கள் 249 கற்பினை நெறியூடு அற்பிணைக் கிழமை நயத்தகு மரபின் வியத்தகு குமர! - என்று, இருவேறு மணவுறவுகளையும் எடுத்துக் காட்டு கின்றனர்.இவர். இவர் சிறந்த முருகன் அடியவர் என்பதனையும் இச்செய்யுட்களால் அறியலாம். காந்தள் செறிந்த கவினைக் கூறுவார், போர் தோற்றுக் கட்டுண்டார் கைபோல்வ; கார் தோற்றுக் காந்தள் செறிந்த கவின் என்று கூறுதலை உணர்க. - சிவபிரான் கங்கையைத் தாங்கிய செய்தியும், அவர் மகனே முருகப் பிரான் என்னும் செய்தியும், இவராற் கூறப்படுகின்றன. 'ளிமலர்த் தாமரையிறைவீழ்த்த பெருவாரி - விரிசடைப் பொறையூழ்த்து விழுநிகர் மலரேய்ப்பத் தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய் நீ" என்கின்றனர். இவர். . 'தள்ளாப் பொருளியல்பின்.தண்டமிழாய் வந்திலார் கொள்ளார் இக் குன்று பயன் என்று கூறித் தமிழ்ப்பண்பை வலியுறுத்துவாரும் இவராவர். ஐவளம், மைவளம், கைவளம், மொய்வளம், மெய்வளம், நைவளம், பொய்வளம் எனவும், ஆர்ததும்பும், சூர்ததும்பும், கார்ததும்பும், ஏர்ததும்பும் எனவும் சொற்களை நயத்தோடு அடுக்கடுக்காகக் கையாண்டு இன்புறவைக்கும் சொல்லாட்சித் திறனுடையவரும் இவராவர் என்பதையும் நாம் அறிதல் வேண்டும். - - - கரும்பிள்ளைப் பூதனார் -10 { இவரும் பூதனார் என்னும் பெயருடைய புலவர்களுள் ஒருவராவர். கரும் பிள்ளை' என்பது இவருது ஊராகலாம்; அன்றி இவரது உடலின் நிறத்தை ஒட்டியதென்றலும் பொருந்தும். இப் பாடல் வையைக்குறியது. இதன்கண் வையைப்புனலை வரவேற்று இன்புறும் மக்களின் கணிகொண்ட நிலையையும், தென்னவர் நாட்டுச் சிறப்பையும், இளைஞரும் கன்னியரும் கொள்ளும் இன்பநாட்டச் செவ்வியையும் மிகவும் அருமையாகப் பாடியுள்ளனர். இவர் களிறும் பிடியும் காதலித்த காட்சி மிக்க நயமுடையது. - - இதையும் கயிறும் பிணையும் இரியச் சிதையும் கலத்தைப் பயினால் திருத்தும் திசையறி நீகானும் போன்ம்' - எனக் கலஞ்செலுத்துவோர் திறனையும்,