பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- புலியூர்க்கேசிகன் # UTIqು சான்றோர்கள் - . 251 கூட்டங்களில் அழகியரைக் கண்டதும் பார்த்து மயங்கும் ஆடவர் சிலரை இன்றும் காண்கின்றோம். அத்தகைய ஒருவனைக் காட்டி, ஒட்டை மனவன்; உரமிலி என அவனுக்குப் பெயரும் சூட்டுகின்றார் இவர். - வையைக் கரைதான் எப்படி மணக்கும்? அதனைக் கூறுகின்றார். இவர். . - மல்லிகை மொளவல் மணங்கமழ் சண்பகம் அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி நல்லினர் நாகம் நறவஞ் சுரபுன்னை எல்லாம் கமழும்.இருசார் கரை..... இவ்வாறு வையையை வாழ்த்தியும், வையைக் கரையைப் போற்றியும் விளங்கும் மிகச்சுவையான பாடல் இதுவாகும். நல்லெழுநியார் - 13 அதியமான் பரம்பரையினரை எழினி’ என்பர். 'எழினி’ என்பதே எழுதி எனகத் திரிந்து வந்தது என்று கருதலாம். எழுனிக்குத் திரைச்சீலை என்பதும் பொருள். அதனை ஆக்கும் தொழிலில் வல்லவராகவும் இவர் விளங்கியிருக்கலாம். அன்றிக் கவினுறு எழுனியனை அமைக்கும் கலைத்திறன், உடைய வராகவும் இருக்கலாம். - . இவர் பாடியுள்ள இப்பாடல் திருமாலைப் பற்றியதாகும். இவர் திருமாலின்பால் பேரன்புடையோராகவும் இருந்தனர்.நின் திருவரை அகலம் தொழுவோர்க்கு உரிதமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து' என்ற இவர் கூறுவது, இவருடைய திருமால் பற்றைக் காட்டும், சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு அவையும் நீயே என்பது, தம் ஐம்புல நுகர்வையும் அவன் செயலாகவே கொண்டு போற்றும் பக்திமையைக் காட்டும். 'ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே ; இரண்டின் உணரும் வளியும் நீயே ; மூன்றின் உணரும் தீயும் நீயே ; நான்கின் உணரும் நீரும் நீயே ; ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே : அதனால், நின்மருங்கின்று மூவேழ் உலகமும் மூலமும் அறனும் முதன்மையில் இகந்த காலமும் விசும்பும் காற்றொடு கனலும் - எனப் பெருமானின் ஆதி முதலாகிய சிறந்த நிலையையும் அவர் உரைத்துப் போற்றுகின்றனர். மற்றும் பலவாறாக இறைவனின் சிறப்பைப் போற்றிய பின்னர், - -