பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 പി.സ-് ഗ്രാ அன்னை யெனநினைஇ நின்னடி தொழுதெனம்; பண்மாண் அடுக்க இறைஞ்சினெம்; வாழ்த்தினேம்; முன்னும் முன்னும்யாம் செய்தவப் பயத்தால்; - இன்னும் இன்னும் எம் காமம் இதுவ்ே! என்று முடிக்கின்றனர். இவருடைய ஒப்பற்ற மனப்பண்பை அறிந்து வியந்துபோற்றல் வேண்டும். கேசவனார் - 14 - செவ்வேளைப் பற்றிய இப்பாடலைப் பாடியதுடன், இதற்கு இசையும் வகுத்தவர் இவர். இதனால் தமிழ்ப் புலமையோடு இசைப்புலமையும் ஒருங்கே பெற்றவர் இவர் எனல்ாம். சேசவன் திருமாலின் பெயர்களுள் ஒன்று. எனினும், இவர் செவ்வேளைப் பாடியுள்ளனர். எனவே, திருமாலின் அடியவர்களான குடியினராயிருந்தும், மால்மருகனாகிய செவ் வேளை இவர் பாடியமை, அக்காலத்திருந்த சமயப் பொதுமை நோக்கைக் காட்டுவதாகும். - பரங்குன்றத்திலே கார்க்ால வரவால் எங்கனும் ப்ொலிவு பெற்றுத் திகழ்ந்த அழகினை மிகவும் நயமாகப் பாடியுள்ளனர். போர் மலிந்து சூர் மருங்கு அறுத்த சுடர்ப்படையோயே! நின் குன்று கார்மலிந்தன்று என, அதன் சிறப்பையெல்லாம் ஒவியப்படுத்திக் காட்டுகின்றன்ர். - - . அன்னையாகலின் அமர்ந்தியாழ் நின்னைத் துன்னித் துன்னி வழிபடுவதன்பயம் இன்னும் இன்னுமவை ஆகுக தொன்முதிர் மரபினின் புகழின் பலவே என்று பாடுகின்ற இவருடைய பக்திச் செறிவிலே, இறைவனைத் தாயாகவும், தம்மைப் பிள்ளையாகவும் கொண்டு போற்றும் உரிமைச் சிறப்பைக் காண்கிறோம். இளம்பெரு வழுதியார் - 15 இவர் பரிபாடலுள் திருமாலுக்குரிய பதினைந்தாம் பாடலைப் பாடியவர். புறநானூற்று 182ஆம் செய்யுளையும் செய்தவர் இவர். கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியும் இவரும் ஒருவரே என்றும் கூறுவர். - உண்டாலம்ம இவ்வுலகம். தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென்ன முயலுநர் உண்மையானே’ என்னும் உயரிய ஒப்பற்ற கருத்தினை உலகுக்குக் கூறியவர் இவர். இக் கருத்தின் விளக்கமாக வாழ்ந்தவர் எனவும் கூறலாம். பாண்டியர் குடியிற் பிறந்தவர் என்பது இவர் பெயரால் விளங்கும். -