பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*— பரிபாடல் மூலமும் உரையும் சந்தனச் சாந்தோனும் ஆயினான். தன் மகனாகிய பிரகலா தனைப் பலவாறாகப் பிணிப்டுமாறு கட்டியும் போட்டான். மனமும் உடலும் மிகவும் ஒடுங்குதற்குக் காரணமான பெருந்துன் பத்தைப் பிரகலாதன் அப்போது அடைந்தான். அவ்வாறு துன்பமிழைத்த இகழ்தற்குரியோன் தன் தந்தையாதலின், அவனை இகழ்தற்குரியவனாகிய பிரகலாதனும், இகழ்தற்கு மனமற்ற வனாகத் தன் துயரைப் பொறுத்திருந்தான். • , நீயோ, இரணியனின் செயலை இகழ்ந்தனை நின்னிடத்தே நல்ல நட்புக் கொண்டோனாகிய பிரகலாதனின், நல்ல மார்பிடத்தே சென்று பொருந்தினை நின்னோடு மனம் பொருந்தாது, நின்னை இகழ்தலையே மேற்கொண்டோனாகிய இரணியனின், பெருமலை போன்ற மார்பின்மேற் பாய்ந்தனை அவன்பாற் படிந்திருந்த செருக்கு அழியும்படியாக, அவன் மீது மோதினை அவ்வேளையிலே மிக்க உற்பாதங்களோடு இடியாகிய முரசமும் வானத்தே எழுந்து ஒலிக்கத் தொடங்கிற்று. வெடி பட்டுத் துண்டாய்ப்போன தூணின் துண்டங் களோடு, இரணியனின் தசைத் துண்டங்களும் பலவாகக் கலந்து வீழுமாறு, அவன் மார்பைப் பிளந்தனை அவ்வாறு வகிர்தலைச் செய்த வலியமைந்த நகத்தினை உடையோனே! நரசிங்கப் பெருமானே! சொற்பொருள் : புலர்ந்த சாந்து - காய்ந்த சந்தனச் சாந்து: சாந்து காய்தற்குக் காரணம் சினத்தால் உண்மான மன வெப்பம். வலந்துழி - கட்டியவிடத்து. நோய் - துன்பம். கூம்பிய ஒடுங்கிய. அலர்ந்த புகழ்-இகழ்தற்குரிய புகழ் உறுவரைமார்பு-பெருமலை போன்ற மார்பு ஒதுங்கி - பாய்ந்து பற்றி, சாம்ப கெட இன்னர் - உற்பாதம் கெட்டகுறிகள். தடி மாமிசத் துண்டங்கள். உகிர் - நலம். *. விளக்கம் : திருமாலின் வைகுண்ட வாயிலிற் காவலருள் ஒருவனாக இரந்தவனே இரணியனாகப் பிறந்தான் என்பது புராணம். அவன். பெற்ற வரம், மூன்று பிறவிகள் திருமாலின் பகைவனாகப் பிறந்து, திருமாலாற் கொல்லப்பட்டு, மீளவும் வைகுந்தத்தைச் சேர்தல் என்பதாம். - குன்றினோடு ஒக்கும் புருவத்துக் கருவல் கந்தத்தால் தாங்கியில் வுலகம் தந்தடிப் படுத்ததை நடுவண் ஓங்கிய பலர்புகழ் குன்றினோ டொக்கும்; இவ்வுலகின் நடுவிடத்தாக ஓங்கியிருப்பது, பலரும் புகழ்தற்கு உரியதாக விளங்கும் மேருமலையாகும். அதுதான் உலகை நிலைபெறுத்தி நிற்கச்செய்வது என்பர். பழங்காலத்தே நீதான் நின் கருமையான வலிய கழுத்தால், கடலடியிலே