பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பரிபாடல் மூலமும் உரையும் கழுவுதல். புலம்புரிதல் - வேதவேதாந்தங்களைக் கற்றறிதல். விளக்கம் : அந்தணர் தூய நீரிற் காலையில் நீராடித் தாம் முறைப்படி ஆற்றுவதற்கான கடமைகளைச் செய்பவர்; அதனால், அவர் மணநாற்றத்தோடு வரும் புனலில் நீராடாதவராக, அதனைக் கண்டு மயங்கி நின்றனர் என்க. சேறுபடு புனல் மாறுமென் மலரும் தாரும் கோதையும் வேரும் தூரும் காயும் கிழங்கும் பூரிய மாக்கள் உண்பது மண்டி நாரரி நறவம் உருப்ப நலனழிந்து வேறா கின்றிவ் விரிபுனல் வரவெனச் - 50 சேறாடு புனலது செலவு: - ஆடவரும் பெண்டிரும் சூட்டிக் கழித்த மென்மலர்களும், ஆடவர் மார்புகளை அணிசெய்திருந்த தாரும், பெண்கள் அணிந் திருந்த கோதையும் ஆற்றுநீரோடு கலந்து வந்தன. மரஞ் செடி கொடிகளின் வேரும், புதரும், காயும், கிழங்கும் புதுப்புனலால் அடித்துக் கொள்ளப்பட்டு நீரோடு மிதந்து வந்தன. இவற்றை உண்ணக் கருதியவராகத் தாழ்குடியினர் பலர் நீரிற் குதித்தனர். 'பன்னாடையால் வடிகட்டப் பெறும் கள்ளின் கலங்கலைப் போலத் தூய்மை நலன் கெட்டு வேறுபட்டது. இந்தப் பரந்த புனலின் வரவு' என்று பலரும் சொல்லுமாறு, சேறாகக் குழம்பிய புதுப்புனலின் போக்கும் அமைந்தது. சொற்பொருள் : மாறும் மென்மலர் - கழித்துப் போடப் படும் மென்மலர். துரு - புதர்; சிறு புதர்களை ஆற்று வெள்ளம் அடித்துக் கொணரும். பூரியர் - கீழ் மக்கள். மண்டி - மிக்கு; மிகுதியாகத் திரண்டு. விரிபுனல் - பரந்த புனல். - விளக்கம்: புதுப்புனலின்வரவு, கள்ளின்கலங்கலைப்போல விளங்கிற்று என்பதாகும். \ மலர்ந்த புனல் வரைய்ழி வாலருவி வாதா லாட்டக் கரையழி வாலருவி கால்பா ராட்ட இரவிற் புணர்ந்தோர் இடைமுலை யல்கல் புரைவது பூந்தாரான் குன்றெனக் கூடார்க்கு 55 உடையோ டிழிந்துராய் ஊரிடை ஒடிச் - சலப்படை யான் இரவில் தாக்கிய தெல்லாம் புலப்படப் புன்னம் புலரியில் நிலப்படத் தான் மலர்ந் தன்றே தமிழ்வையைத் தண்ணம் புனல்; 60