பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hoogsesses * assoas (8) ੰ 79 கூடல் வரவு ஏழ்புழை ஐம்புழை யாழிசை கேழ்த்தன்ன இனம் வீழ்தும்பி வண்டொடு மிஞரார்ப்பச் சுனைமலரக் கொன்றை கொடியினர் ஊழ்ப்பக் கொடிமலர் - மன்றல் மலர மலர்க்காந்தள் வாய்நாற - 25 நன்றவிழ் பன்மலர் நாற நறைபனிப்பத் . தென்றல் அசைவரூஉம் செம்மற்றே, அம்மநின் குன்றத்தால் கூடல் வரவு: ஏழுதுளைகளையும், ஐந்துதுளைகளையும் கொண்ட குழலிசையினையும், யாழிசையினையும் ஒத்தாற்போல முரலு கின்ற, தம் இனத்தை விரும்புகின்றவான வண்டுகளோடு, தும்பி யினமும் ஆரவாரிக்கும்படியாகச் சுனையிடத்துள்ள நீர்ப்பூக்கள் மலர்ந்திருக்கும். கொன்றையிடத்தே கொடிபோல விளங்கும் பூங்கொத்துக்கள் விளங்கும். மலர்க் கொடிகளிடத்தே மணமுள்ள மலர்கள் மலர்ந்திருக்கும். காந்தளின் மலர்ந்த மலர்கள் இடமெங்கணும் மலர்ந்திருக்கும். இவ்வாறு, நன்றாக இதழவிழ்ந்த பலவகை மலர்களும் மணத்தைப் பரப்பியும், தேன்துளிகளைச் சிந்தியும் விளங்கத், தென்றலானது அசைந்து வந்தபடியிருக்கும் சிறந்த தன்மை யுடையதாயிருப்பது, நின் பரங்குன்றத்திற்குக் கூடலிலிருந்து வருகின்ற வழியாகும் - சொற்பொருள் : புழை -துளை. கேழ் நிறம். வீழ் விரும்பும். மிஞ்று - வண்டின் ஒரு வகை நறை - தேன். செம்மல் - தலைமை. வரவு - வழி கூடல் - மதுரை. - குமுறிய உரை குன்றம் உடைத்த ஒளிர்வேலோய்! கூடல் மன்றல் கலந்த மணிமுரசின் ஆர்ப்பெழக் 30 காலொடு மயங்கிய கலிழ்கட் லென மால்கடல் குடிக்கும் மழைக் குரலென ஏறதிர்க்கும் இந்திரன் இரும் உருமென மன்றல்அதிரதிர மாறுமாறு அதிர்க்கும்நின் குன்றம் குமுறிய உரை: - 35 சிரவுஞ்சமாகிய குன்றத்தை உடைத்த ஒளிரும் வேற் படை யினை உடையாய்! கூடலிடத்தே மணவிழாக்களிற் பொருந்திய அழகிய முரசங்களின் ஆரவாரம் எழும். காற்றோடு பொருதி மயங்கிய கடலின் கலக்கத்தைப் போலவும், பெருங்கடலைக் குடிக்கும் மேகங்களின் இடிமுழக்கைப் போலவும், இந்திரனது படையாகிய இடியானது இரும்உரும் என முழக்குமாறு போலவும், அம் முரம்சங்க்ளின் ஒலியானது மாறி மாறி எழுந்தொலிக்கும். மணமுர்சங்கள் கூடலில் அதிரவதிர, அதற்கு |