பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - - பரிபாடல் மூலமும் உரையும் வரான பரத்தையரோடுங்கூடிக் களியாட்டம் அயர்கின்றாய்! ஒள்ளிய மலர்கள் விளங்கும் மாலை நேரத்திற்கு மாலைநேரமாக மட்டுமே என்பால் வருகின்றாய். ஆகவே, பரங்குன்றைக் குறித்துப் பொய்யாணையிடும் நின் செயலையேனும் செய்யாது நிறுத்துக" என்கிறாள். - சொற்பொருள் : மன்னும் - மிகவும், ஏதிலர் - அயலாரான பரத்தையர். ஆண்டு - அவ்விடத்து; பரத்தையர் இல்லிடத்து. பனிமலர் - குளிர்ந்த தாமரை மலர் கண்கள். சிவப்பென்றது கூடலின் பயனால் விளைந்ததனைக் குறித்துக் கூறியது. நகை . நின் சூள்! இனிமணல் வையை இரும்பொழிலும் குன்றப் பனிபொழி சாரலும் பார்ப்பாரும் துனியல் மலருண்கண் சொல்வேறு நாற்றம் கனியின் மலரின் மலர்கால் சீப் பின்னது: - துனியல் நனி நீ நின் சூள்; r 55 தலைவன் தலைவியின் குற்றச்சாட்டைக் கேட்டுத் திடுக்கிடு கின்றான். அவளைத் தேற்றித் தெளிவிப்பானாக, மீண்டும் ஆணையிட்டு உரைக்கின்றான். - - "நீதான் பெரிதும் வருத்தமுறாதே. குவளை மலர் மையுண்டாற் போன்ற கண்களை உடையவளே! நீ கூறிய சொற்கள் உண்மைக்கு மாறுபட்டதாகும். இப்பொழுது, மணல் பரந்த வையையாற்றின் கரையிடத்துப் பெரிய சோலைகளும், பரங்குன்றிடத்துக் குளிர்ச்சியைப் பொழியும் மலைச் சாரலும், பார்ப்பாரும் சான்றாகக் கூறுகின்றேன்; என் உடலின்கண் மாறுபட்ட புதுமணத்தை நீ கண்டது, நின் கூற்றுப்போல் நான் பரத்தையரைக் கூடியமையாற் பெற்றதன்று. பழங்களினும், மலர்களினும் படிந்துவரும் காற்று வீசுவதனால் நீ காண்பதே அப் புதுமணம் என்று அறிந்து தெளிவாயாக. சொற்பொருள் : துணியல் - வருந்தாதே கொள். நாற்றம் - மணம், சீப்பினது - வீசுதலால் உண்டானது. - சூளுரைத்தல் வேண்டா! என்பாணி நில்நில்! எலாஅ பாணி நீ நின்சூள்! சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்! ஈன்றாட்கு ஒரு பெண் இவள்; "இருண்மையிர் உண்கண் இலங்கிழை ஈன்றாட்கு அரியளோ! ஆவது அறிந்திலேன்? ஈதா 60 வருபுனல் வையை மணல் தொட்டேன்; தருமணவேள்