பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் : செவ்வேள் (8) - - 83. தண்பரங் குன்றத்து அடிதொட்டேன் என்பாய்! கேளிர் மண்லின் கெழுவும் இதுவோ? ஏழுலகும் ஆளி திருவரைமேல் அன்பளிதோ: என்னை அருளி அருள்முருகு சூள்குளின் 65 நின்னை அருளில் அணங்கான்மெய் வேல் தின்னும், விறல்வெய்யோன் ஊர்மயில் வேல்நிழல் நோக்கி அறவர் அடிதொடினும் ஆங்கவை குளேல் குறவன் மகளானை கூறேலோ கூறேல்! ஐய! சூளின் அடிதொடு குன்றொடு To வையைக்குத் தக்க மணற்சீர்சூள் கூறல்; . இருவரது ஊடலையும், ஊடலுரைகளையும் கண்டாள் தோழி. அவள் தலைவனிடத்தே சில செய்திகளைக் கூறுகின்றாள்; சான்றாண்மை உடையோர் பெற்றெடுத்தவனாக இருந் தும், தகுதியற்ற செயல்களையே தொடர்ந்து செய்துகொண்டு வருபவனே! நான் கூறும் சொற்களைக் கேட்பதுவரைக்கும் சற்றுப் பொறுமையாக நின் பேச்சை நிறுத்துவாயாக மீளவும் நீதான் ஆணையிடுதலையும் சிறிது காலத்துக்கு நிறுத்தி வைபபாயாக. - "இவளைப் பார்; இவளைப் பெற்ற தாய்க்கு இவள் ஒரே பெண்ணாகப் பிறந்தவள். இருட்சியையும், மைதீட்டப் பெற்ற வனப்பையும்,செவ்வரிகளையும் கொண்ட கண்களை உடையாள் இவள், விளங்கும் அணிகளை உடையாள் இவள்; இவள்தான் இவளைப் பெற்ற தாய்க்குத் தாங்கிப் பெணுதற்கரிய சுமை யாவாளோ? ஆனால், நின்ன்ைக் காதலித்ததன் பயனால், இவளுக்கு ஆகப்போவது என்னவென்பதை யானும் அறிந்திலனே! "இதோ பார்; புனல்வரத்தையுடையவையையின் மணலைத் தொட்டேன். மணவாழ்வைத் தரும் முருகவேளது தண்ணிய பரங்குன்றத்து அடியைத் தொட்டேன். ஆணையிட்டுக் கூறுவேன் என்பாய்.எம் உறவினைப்போல விளங்கும் வையை மணலிடத்தே உனக்குள்ள நட்புறவும் இதுதானோ? ஏழுலகங்களையும் ஆட்சி செலுத்துவோனான் முருகப் பெருமானுக்கு உரியதான அழகிய மலையின்மேல் நீ கொண்டிருக்கும் அன்பினது தன்மையும் இரக்கத்திற்கு உரியதுதானோ? . “எம்பால் அருள் கொண்டவனாகக் காட்டுதற் பொருட்டாக, நின் தீயொழுக்கத்தை மறைத்தாயாக, அருளாளனாகிய முருகனின்மீது பொய்யாணையிட்டு ஏதும் உரைத்தாயானால், நின்னை அருளற்றவான அணங்குகளோடு கூடிப் பெருமானிடத் திருக்கும் சத்திய வேற்படையும் உண்டு விடும். *