பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9

 திவான் பஹதூர்.செட்டியார் அவர்கள் புஸ்தகத்தைப் படிக்காமலே, முகவுரை எழுதிக் கொடுத்தாரே " என்றார். அதைக் கேட்டவுடன் இப்படிப் பட்ட தமிழ் ஆசிரியர்களும் முகவுரை எழுதுபவர்களும் இருப்பதனால்தான், தமிழ் பாஷை இக்கதியி லிருக்கிற தென்று அட்ங்காக் கோபங் கொண்டவனாயினும், அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு, 'ஆனால் அவரிடமே கொண்டு போய் இன்னொரு முகவுரை இதற்கும் எழுதிக் கொள்ளுகிறதுதானே ? " என்றேன்.


" அப்பேன்! நீ கோவித்துக் கொள்ளாதே. இதற்கு உன் முகவுரை தான் வேண்டுமென்று வந்தேன் ' என்றார்.


" அப்படியானால், தயவு செய்து இரண்டு தினங்கள் கழித்து வாருங்கள், பிறகு சொல்லுகிறேன்” என்று சொல்ல, "சரி! நீ பிடி வாதக்காரன்-எனக்குத் தெரியுமே அப்படியே ஆகட்டும் ' என்று சொல்லிக்கொண்டே கீழே இறங்கிப் போனார்.


அதன்பேரில் இனி நான் ஏதாவது புத்தகம் அச்சிட்டால் அதற்கு ஒருவரையும் முகவுரை எழுதக் கேட்க லாகாதென்று தீர்மானித்துவிட்டு எப்படியாவது நான் இன்று காலை எழுதத் தீர்மானித்த்தை எழுதித்தான் முடிக்கவேண்டுமென்று நிச்சயம் செய்துகொண்டு, என் மெத்தைக்கு வரவேண்டிய இரண்டு வழியின் கதவுகளையும் உள்ளே தாளிட்டுக் கொண்டு, என் மேஜைக்கு எதிரில் வந்து உட்கார்ந்து, என் பென் சில எடுத்துக்கொண்டு, இந்த அவஸ்தையில் கீழே எப்படியோ விழுந்த நான் எழுத ஆரம்பித்த காகிதத்தையும் எடுத்துக் கொண்டு, அதில் நான் ஆரம்பித் திருந்த்தைப் பார்க்க அதில் முதல்-அ என் றிருக்கக் கண்டேன். இத்தனை இடைஞ்சல்களில் நான் என்ன எழுத எண்ணி விருந்தேன் என்பதே முற்றிலும் மறந்து போய் விட்டது. 'முதல்-அ' என்றால் முதல் அத்தியாயம் என்று எழுத வெருந்தேனா அல்லது முதல் அங்கம் என்று எழுத இருந்தேனா என்று சந்தேகம் பிறந்தது. இந்தச் சமயம், என் மேஜையின் பேரில் இருக்கும் டெலி போன் (Telephone) மணி யடிக்க, அதன் குழாயை எடுத்துக் கொண்டு, "யார் பேசுவது?" என்று நான் கேட்க ரேடியோ ஆபீசு மேனேஜர், “நீங்கள் அனுப்புவதாகச் சொன்ன ரேடியோ நாடகம் எழுதி முடிந்ததா ?” என்று கேட்டார். உடனே எனக்கு அடங்காச் சிரிப்பு வர, கலகல வென்று சிரித்தேன். கீழே இருந்து இதைக் கேட்ட என் மனைவி, கதவுகளைப் பூட்டிவிட்டு, தனியாக மெத்தையிலிருந்துகொண்டு சிரிக்கிறாரே என்று சந்தேகப்பட்டவளாய், அவசரமாய் ஓடிவந்து கதவை தபதப வென்று தட்ட நான் கதவைத் திறந்து என்ன வென்று கேட்க, 'இல்லை; தனியாக சிரித்துக் கொண் டிருக்கிறீர்களே! என்ன-சமாசாரம் என்று கேட்கலாமென்று வந் 2