பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10

10 தேன்' என்றுள். பிறகு நான் விசாரித்ததில், 'எனக்கு எதாவது பயித்தியம் பிடித்து விட்டதோ என்னவோ' என்று சந்தேகப் பட்ட தாக மெல்லத் தெரிவித்தாள். அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை ? என்று சமாதானம் சொல்லி நான் எழுத ஆரம்பித்தது முதல் எனக்கு நேரிட்ட இடையூறுகளை யெல்லாம் சொல்லிச் சிரித்தேன்; அதன் பேரில் அவள், தானும் சிரித்துவிட்டு, 'இது விந்தையாய் இருக் கிறது. இதையே ஒரு வியாசமாக உங்கள் ரேடியோ நண்பருக்கு எழுதி யனுப்புங்களேன்' என்ருள். இது நல்ல யுக்திதான் என்று எண்ணி அப்படியே செய்தேன். ஒரு பாட்டினல் வந்த உபத்திரவம் (கட்டு கதை) சில வருடங்களுக்கு முன்பு, எனக்கு ஒரு நாள், வடக்கேயிருந்த ஒரு நண்பரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது; அதில் மறுநாட் காலை, சென்னைக்கு பரோடா சமஸ்தான சங்கீத வித்வான் ஒருவர் வரப் போகிற தாகவும், அவர் வடக்கேயுள்ள இந்துஸ்தானி சங்கீதத்தில் மிகவும் பெயர் பெற்றவர் என்றும், தனக்கு மிகவும் ஆப்த நண்ப ரென்றும், அவர் ராமேச்வர யாத்திரைக்குப் போகும் வழியில் சென்னை யில் ஒரு நாள் தங்கப்போவதாகவும் மறுநாட்காலேயில் அவரை ரெயில் ஸ்டேஷனில் சக்தித்து, வரவேற்று, என் வீட்டிற்கழைத்துக் கொண்டு போய் உபசரித்து, அவர் கர்நாடக சங்கீதத்தைக் கேட்க மிகவும் ஆசைக் கொண்டிருப்பதால் அந்த தினத்திற்குள் எவ்வளவு நல்ல கர்நாடக சங்கீதம் கேட்க முடியுமோ, அவ்வள்வும் கேட்கச் செய்ய வேண்டியது என் கடமை என்றும் எழுதியிருந்தது. அவர் பெயர் வியைகராவ் பான்ஸ்லே. அவர் இந்துஸ்தானி கவாய்களில் மிகச் சிறந்தவர் என்று நான் முன்பே கேள்விப்பட்டிருந் தேன், ஆகவே அவரை நேரில் பார்க்கும்படியான சர்ந்தப்பம் நேரிட் டதே என்று மிகவும் சந்தோஷப் பட்டேன். அன்றியும் இந்துஸ்தானி சங்கீதத்தைவிட, கர்நாடக சங்கீதம் மிகவும் உயர்ந்தது என்று என்க்கு அந்தரங்கத்தில் ஒரு அபிப்பிராயம் நெடுநாளாக உண்டு. ஆகவே இந்த வடக்கத்திய சங்கீத வித்வானுக்கு நம்முடைய சங்கீத்த்தின் பெருமையை எடுத்துக் காட்ட வேண்டும் எனும் எண்ணம் உதித்தது. ஆகவே மிகவும் மனக் கிளர்ச்சியுடன் மறுநாட் காலையில், அவரை சென்னை ரெயில் ஸ்டேஷனுக்குப் போய் வரவேற்று, மாலே மரியாதை யுடன் உபசரித்து, என் காரில் அவரை ஏற்றிக்கொண்டு என் வீட்டிற்