பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

** மாம், 'ஐயா, ஏதோ வேலையாயிருக்கிறார் அப்புறம் வா-என்றால் கேட்க மாட்டேன் என்கிறார் ' என்றான். 'அடடா தந்தி கொண்டு வந்தால் நீ தடுக்கலாமா-அனுப்பு மேலே ' என்றேன். உடனே அந்த தந்தி ஆபீசு பீயூன் மேலே வர-'என்ன தந்தி ' என்று நான் வினவ, அதற்கு அவன் 'தந்தி ஒன்றும் இன்றைக்கு வர வில்லேங்கோ-என் பிள்ளைக்கு வர்ற வாரம் கலியாணம், அதற்காக கண்டுகொண்டு போகலாம் என்று வந்தேன் ' என்று பதில் உரைத் தான். இதற்கு-என் கோபத்தை சற்று அடக்கிக் கொண்டு, ‘எப் பொழுது கலியாணம்' என்று கேட்டு, வருகிற வாரம் என்று அவன் சொல்ல, ஆனால் இன்னும் நான்குதினம் கழித்து வா என்று சொல்லி யனுப்பிவிட்டு, என் வேலைக்காரனைக் கூப்பிட்டு "இனிமேலே, யாரா வது என்னைப் பார்க்க வந்தால், யார், எதற்காக என்னைப் பார்க்கவந் திருக்கிறார் என்றெல்லாம் விசாரித்துக் கொண்டு, பிறகு என் உத்திர வின் பேரில்தான் மேலே விடவேண்டும்;- இல்லாவிட்டால் உன்னை டிஸ்மிஸ் பண்ணி விடுவேன் ' என்று சொல்லி யனுப்பினேன்.


இத்தனை கலவரத்தில் நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என் பதே எனக்கு மறந்துபோய்விட்டது. அதை ஞாபகப்படுத்திக்கொள் வதற்காக, என் வழக்கப்படி சற்று எழுந்து உலாவினேன். அப்படி உலாவிக்கொண்டிருக்கும் பொழுது, என் ஆள் சபாபதி மெத்தைக்கு வந்து, "என் பேர்லே கோவிச்சிக்காதைங்க. - யாரோ ஒருத்தர், இத்தே உங்க கிட்டே கொடுக்கச் சொன்னாரு ' என்று ஒரு விசிடிங் கார்டை (Visiting card) என்னிடம் கொடுத்தான். அதில் R. G. Paul, 1. C. S. என்று அச்சடித்திருந்தது. உடனே நம்மைப் பார்ப்பதற்காக யாரோ பெரிய கலெக்டரோ, அல்லது கவர்மெண்ட் உத்தியோகஸ்தரோ வந்திருக்கிறார். அவரைப் பாராமலிருப்பது தவறு என்று எண்ணி, உடனே அவசரமாய்க் கீழே இறங்கிப் போய், என் வீட்டின் வாயிலண்டைப் பார்க்க, அங்கே ஒரு பெரிய மனிதரையும் காணோம்;-கார் ஒன்றையும் காணோம். யாரோ-சுமார் 18 வயது டைய பிள்ளையாண்டான், ஒரு குல்லாயணிந்தவன்-ஒரு பக்கமாக நின்று கொண்டிருந்தான். அதன் பேரில் கோபங்கொண்டு, சபா பதியை அழைத்து, ' யார் இந்த கார்டை உன்னிடம் கொடுத்தது ?" என்று கேட்க, அவன், “இந்த ஐயா! தான் கொடுத்தார்' என்று அந்த வாலிபனைக் காட்ட "யாரப்பா நீ ' என்று அவனைக் கேட்க. 'நான்தான் R. G. Paul, I.C.S." என்றான். அதன் பேரில் ஒரு வேளை தவறாக எண்ணினோமோ என்னவோ என்று திடுக்கிட்டு, அவரை மெத்தைக்கு வரும்படி கூறி, மேலே அழைத்துச் சென் றேன்.-அப்புறம் அவரை உட்காரும்படி வேண்டி உங்கள் பெயரை நான் கேட்டதில்லை.-நீங்கள் சென்னை ராஜதானியில் இருக்கிறீர்களா அல்லது.-என்று ஆரம்பித்தபோது, அவர் நான் இங்கத்தியவன்