பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
5

بیم 3. ' என்ன அப்பா, இத்தனை நாள் என்னத் தெரிந்திருந்து ஒரு சிபாரிசு காகிதம் கொடுக்க பால்மாறுகிருயே ' என்ருர், -இவரை அனுப்பிவிட வேறுவழியில்லை என்று ஒரு யுக்தி செய்தேன்-காகிதம் பேஞ்வை எடுத்து வைத்துக் கொண்டு, " உன் னுடைய பந்துபேர் என்ன?" என்றேன்.

  • கலியான சுந்தரம் ஐயர் ”-என்ருர்.

ஒரு சமாசாரம்-நான் பொய் பேசமாட்டேன்-உனக்கு தெரியும்ே இல்லையோ ?”

  • யார் உன்ன பொய் பேசும்படி கேட்டது?" என்று கேட்டார். " ஆளுல் சரிதான் ' என்று சொல்லி விட்டு-பின் வருமாறு கடிதம் விரைவில் எழுதிக் கொடுத்தேன்.

டிார்னிங்டன் துரை அவர்களுக்கு ஐயர்-உங்களை எனக்கு முன்பின் தெரியாது. உங்கள் பாங்கில் ஏதிே வேலை காலியா யிருக் கிறதாம். அதற்காக, என் பால்ய சிநேகிதர், தன் பந்து ஒருவனுக்கு (அவர் பெயர் கல்யாண சுந்தரம்) சிபாரிசு காகிதம் கொடுக்கும்படி கேட்கிருள்.-அந்த கல்யாண சுந்தரத்தை நான் பார்த்ததேயில்லை. அவனுக்கு நீங்கள் காலியாயிருப்பதாகச் சொல்லப்பட்ட வேலையைக் கொடுப்பதானுல்-கொடுக்கலாம் ” ふ s " இது சரியா யிருக்கிறதா பார் ' என்று அவரிடம் காண்பித் தேன். இதைப் படித்துப் பார்த்து விட்டு கோபத்துடன் ' என்ன இப்படி எழுதினயே ' என்ருர், அதற்கு நான், 'பொய் பேசாமல் வேறு நான் என்ன எழுதுவது சொல்' என்று கேட்க, பதில் ஒன்றும் செல்வதற்கில்லாமல் " நான் வந்த வேளை தவறு ' என்று சொல்லிக் கொண்டே சரேலென்று இறங்கிப் போய் விட்டார். எனக்கும் அவர் கடைசியில் சொல்லி விட்டுப் போன வாக்கியம் சரியென்று தோன்றியது. அப்புறம், இனியாவது சாவகாசமாய்த் தடையின்றி எழுதலா மென்று தீர்மானித்து மேஜையின் பேரில் வைத்திருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தேன்.-அதில் ' முதல் '-என்று எழுதியிருந்ததைக் கண்டேன். என்ன முதல் ? என்று யோசித்துப் பார்த்தேன்.-புரிய வில்லை என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது கீழே என் வேலையாள் சபாபதி, யருடனுே உரத்த சப்தமாய்ச் சச்சர விட்டுக் கொண்டிருக்கும் கோஷ்டம் கேட்டது. அதன் பேரிள், "யாரடா அது சபாபதி ' என்று நான் கேட்க, 'இல்லங்கோயாரோ தந்தி ஆசிபிலிருந்து வந்திருக்கிருர், உங்களைப் பார்க்க வேணு