பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பாட்டும் தொகையும்

இருத்தல் வேண்டும் எனவும், பத்தாவது பத்து யானைக் கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்பானைப் பற்றியதாக இருத்தல் வேண்டுமெனவும் அறிஞர் சிலர் கருதுகின்றனர்.

பதிற்றுப்பத்து காட்டும் செய்திகளைக் கொண்டு பழந்தமிழ் நாட்டின் வரலாற்றினை ஒருவாறு கணிக் கலாம். பொதுவாகச் சேரநாடு நிலவளமும் நீர்வளமும் பெற்ற நாடாக இருந்தது. அந்நாட்டில் நெய்தல், குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நான்கு நிலத்துப் பொருள்களும் ஒருங்கே விளைந்து மலிந்திருந்த செய்தி இரண்டாம் பத்தால் அறியப்படுகின்றது.

கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு கனந்தலை கன்னாட்டு

-பதிற்றுப்பத்து 15: 16-17

அந்நாட்டு மக்கள் பிறர்க்குரிய பொருளை விழை யாதவர்களாகவும், குற்றமில்லாத அறிவுடையவர் களாகவும், செந்நெறியினின்றும் பிறழாதவர்களாகவும், அன்பு நெறியைக் கடைப் பிடிப்பவர்களாகவும், தமக்குக் கிடைத்த பொருளைப் பலரொடும் பகுத்துண்ணும் பண் பாளராகவும் கூறப்படுகிறார்கள். பணியாற்றாமல் வீணே மூத்துப் போன யாக்கையினையும், நோயையும் இல்லாத வர்களாக அவர்கள் காணப்படுகின்றனர்.

கடலுங் கானமும் பலபயம் உதவப் பிறர்பிறர் கலியாது வேற்றுப்பொருள் வெஃகாது மைஇல் அறிவினர் செவ்விதின் நடந்துதம் அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள் மூத்த யாக்கை யொடு பிணியின்று கழிய

-பதிற்றுப்பத்து 22: 6-10