பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பாட்டும் தொகையும்

கூறும் இருபத்தைந்து அடிச் சிற்றெல்லையும் நானுாறு அடிப் பேரெல்லையும் கொண்டுவரும்’ என்று தொல்காப் பியம், பரிபாடலின் இலக்கணம் கூறும்.

பரிபாடற்கண் மலையும் யாறும் ஊரும் வருணிக்கப்படும். என்பர் இளம்பூரணர்.

உரையாசிரியர், பேராசிரியர் ‘அறம்பொருள் இன்பம் வீடு எனும் உறுதிப் பொருள் நான்கினுள் இன்பத்தைப் பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளை யாட்டு, புனல் விளையாட்டு முதலியனவற்றில் இப் பாடல்: வரும்’ என்று குறிப்பர்.

உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர், ‘தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றி வரும் என்று இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகச் சுட்டுவர்.

பரிபடல்கள் இருபத்திரண்டு

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட் டாயிரு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர் -அகம். : நூ. 51

என்கிற தொல்காப்பிய அகத்திணை நூற்பாலால் அகப் பொருள் செய்திகளை நாடக வழக்கினும், உலக வழக் சினும் பொருத்தி அழகுறப் பாடற்கு உரியன கலிப்பாவும் பரிபாடலுமே எனும் உண்மையினை அறியலாம்.

இன்று கிடைக்கும் இருபத்திரண்டு பாடல்களுள் 1, 2, 3, 4, 13, 15-ஆம் எண்ணுள்ள பாடல்கள் ஆறும் திருமா லைப்பற்றியன வாகும். இவை அன்றிப் பரிப்பாடற் பகுதி களில் உள்ள பாடல்களுள் ஒன்றும் திருமாலைப்பற்றிய தாகும். இவ்வகையில் திருமாலைப் பற்றிய எட்டுப்