பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பாட்டும் தொகையும்

இங்கும் உவமைகளும் உருவகங்களும் இயற்கையைச் சார்ந்து வந்தாலும், அகப்பாடல்களில் காணப்படும் அளவுக்கு மனித உணர்ச்சிகளும் இயற்கைக் காட்சிகளும் பின்னிப்பிணைந்த ஒரு நிலையைக் காணமுடியாது. புலவர்கள் தங்கள் புரவலர்களில் நாட்டுவளங்களைப் பாடும் இடத்திலும், உவமைகளிலும் புறப்பாடல்களில் இயற்கை வருணனை இடம்பெற்றுள்ளதாக அறிஞர்கள் ஆய்ந்து தெளிநதுள்ளனர். (டாக்டர் மு. வரதராசன்; பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, (ப. 84-44)

வீரம்

புறநானுாற்றின் சிறப்பான பொருளே (பாடு இபாருளே) வீரம்தான். வீரச்செயல்கள்ே மிகுதியும் போற்றிப் புகழப்பட்டுள்ளன.

களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர்எதிர்ந்து

எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்

எண்தேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த கால்அன் னோனே

-புறநானூறு ; 87

என்ற ஒளவையார் பாடல் இதற்குச் சான்றாகலாம் இவ் வாறே எல்லாப் பாடல்களிலும் வீரமும், மன உறுதியும் கூறப்பட்டுள்ளதை யறியலாம். மைந்தன் கடனாகக் களி றெறிந்து பெயர்தல் என்பது இதை வலியுறுத்துவதாகும்.

முடிவுரை

இவ்வாறாகப் புறநானுாறு சிறந்த வரலாற்றுப் பெட்டகமாகவும், புண்டைத் தமிழரின் வாழ்க்கைநெறி தளின்_பேழையாகவும் மிளிர்கிறது. அன்றியும் உலக இலக் கியத்திற்கும் பண்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் மனிதகுல முழுமைக்கும் தமிழினம் தந்த தலையாய கொட்ைக்ளி லேயே தலையாயவை எவை என்று கேட்டால், சில பாடல் களை இவைதான் என்று தலைநிமிர்ந்து கூறலாம். அத்தகைய பல - சிறந்த பாடல்கள் புறநானூற்றில் புதைந்து கிடைக்கின்றன.

1ாா கங்ாக கது.