பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பாட்டும் தொகையும்

மதுரைக்காஞ்சியில் நிலையாமை உணர்த்தப்பட்டது: பட்டினப்பாலையில் பிரிதல் ஒழுக்கம் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இல்லறத்தில் தலைப்படத் துணியும் தலைவன் அவ் இல்லறம் முட்டுப் பாடின்றி நடைபெறப் பொருளின் தேவை இன்றியமையாமை என்று உணர்கின்றான். பொருள் தேடிவரும் பொருட்டுத் தன் தலைவியையும் பிரிய முற்படுகிறான். தலைவனின் எண்ணத்தைத் தலைவி அறிகிறாள். அவன் பிரிவினை எண்ணிக் கலங்கிக் கையறு கின்றாள். அவள் கலக்கத்தைப் போக்க நினைக்கும் தலைவன் தன் நெஞ்சை நோக்கிப் பின்வருமாறு கூறிக் கொள்கிறான் : ‘நெஞ்சே! முட்டுப்பாடில்லாத செல்வங் களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இக் காவிரிப் பூம்பட்டினத்தையே பெறுவதாக இருப்பினும், நான் நீண்ட கருங்கூந்தலையுடைய என் தலைவியைப் பிரித்து செல்லவேண்டிய வழியோ கரிகால்வளவன் தன் பகைவரை வெல்வதற்கு ஒச்சிய வேலைக் காட்டினும் வெம்மையானது; ஆனால் தலைவியினுடைய தோள்களோவெனின் அவ னுடைய செங்கோலைவிடக் குளிர்ச்சியானது. எனவே தலைவியை விட்டுப் பிரிந்து வரமாட்டேன்.’

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்

வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய

வாரேன் வாழிய நெஞ்சே.

-பட்டினப்பாலை : 218 - 220:

திருமா வளவன் தெவ்வர்க்கு ஒக்கிய வேலினும் வெய்ய கானம் அவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே

-பட்டினப்பாலை : 299 - 301 இவ்வாறு தலைவன் கூறுவதாகப் பட்டினப்பாலை அமைந்துள்ளது.