பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 Ꮾ பாட்டும் தொகையும்

பெருந்தேவனார் ஆவர். திருமாலின் பரத்துவ நிலையை விளக்கும் அச்சிறந்த பாடல் வருமாறு :

மாநிலம் சேவடி யாகத் துளநீர் வளைநரல் பெளவம் உடுக்கை யாக விசும்பு மெய்யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே!

நற்றிணையின் முதற்பாடல் கபிலருடையது. குறிஞ்சிப்பாடக் கபிலன் என்னும் பெயர் பெற்ற கபிலர் குறிஞ்சித்திணைப் பாடலைப் பாடுகிறார்.

தோழி என் காதலர் நிலையில் திரியாத வாய்மை யுடையவர்;நெடிதாகத்தோன்றுகின்ற இனிமையுடையவர்; எப்பொழுதும் என் தோழியினைப் பிரியும் தன்மை உடையவரல்லர். அத்தகு சிறப்பு வாய்ந்த தலைவனுடைய நட்பு, தாமரையின் குளிர்ந்த தாதினையும், மேலோங்கி வளர்ந்திருக்கின்ற சந்தனத்தின் தாதினையும் ஊதி, அந்தச் சந்தன மரத்தில் கட்டியுள்ள இனிய தேன் போல உறுதி யாக ஒத்த தன்மையுடையவன். ஆதலின் அத்தலைவன் நீரையின்றி அமையாத உலகம் போலத் தம்மையின்றி அமையாத நம்மாட்டு முன்பு விருப்பம் மிக்கு அருளிய பின்பு பிரிதலால் நம் நறுமணம் மிக்க நெற்றி பசலை யூர்வதற்கு அஞ்சிச் செய்வதறியாதவராய்த் தடுமாற்றம் அடைவாரோ? அவ்வாறு செய்யமாட்டார்.

நின்ற சொல்லர் நீடுதோன்றினியர் என்றும் என்தோள் பிரிபறி யலரே தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச் சாந்தின் தொடுத்த தீங்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை