பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை 77

நீரின்று அமையா உலகம் போலத் தம்மின் றமையா கங் கயங் தருளி நறுநுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை உறுபவோ செய்பறி யலரோ

-நற்றிணை : I

பெயர் தெரியாத புலவர் மூவர் பாடலில் தலைமகளின்

தலையாய பண்பும், அரசர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பும் ஒருங்கு காணப்படுகின்றன.

‘மலர்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த ஊரையுடை யோனே! இனிய முற்றிய கரும்புடைய கள்ளுறைவினையும் இழையசைந்த நெடிய தேர்களையும் உடைய வலிமை மிக்க சோழமன்னர், கொங்கரை அடக்கும் பொருட்டு, வெண்மை நிறம் வாய்ந்த கொம்பினையுடைய மோகூர் என்னும் ஊரின் தலைவனாகிய பழையன் என்னும் சேனைத் தலைவனிடத்துத் தப்பாத வேற்படையைப் பெற்று வைத்திருந்தாற் போன்ற தந்து பிழைபடாத நல்ல மொழியைக் கேட்டு உண்மையெனத் தெளிவுபெற்ற இவளுக்கு, அண்ணாந்து எழுந்த உயர்ந்த அழகிய கொங்கைகள் தளர்ந்தாலும், பொன் போன்ற மேனியிலே கருமணி போலத் தாழ்ந்த நல்ல நீண்ட கூந்தல் நரை யுடனே முடிக்கப் பெற்றாலும், அக்காலத்து இவள் நம் அழைப்புக்குப் பயன்படாது முதிர்ந்துளாள் என்று கருதிக் கைவிடாமல் கொண்டு பாதுகாப்பாயாக’ என்று உடன் போக்கு நேர்ந்த தலைவனிடம் தலைவியைக் கையடை

தந்து தோழி குறிப்பிட்டாள்.

அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியில் தாழ்ந்த கத்னெடுங் கூந்தல் கரையொடு முடிப்பினும் நீத்தல் ஒம்புமதி பூக்கேழ் ஊர! இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்க்