பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

9

சிறியது ஆறு மாதமாகும்போது நன்றாக மூடிவிடும். பெரியது 12 மாதமாகும் வரை நன்றாக மூடாமலிருக்கும்.

குழந்தை தாய் வயிற்றில் எவ்வளவு விரைவாக வளர்ந்ததோ, அவ்வளவு விரைவாகப் பிறந்த பின்னர் வளர்வதில்லை. குழந்தை பிறந்த ஒரு வார காலத்தில், அதன் எடையில் 1/2 இராத்தல் குறையும். ஏனெனில், தாயிடம் ஊறும் பாலில் தொடக்கத்தில் அதிக ஊட்டமிருக்காது. அதைப் பால் என்ற கூறாமல், சீம்பால் (Colostrum) என்று கூறுவர். அது மலமிளக்கியாகவே (Laxative) பயன்படுகிறது. பிறகு தாய்ப்பால் ஊட்ட முடையதாகும். அதனால் இரண்டு வார இறுதியில் குழந்தையின் எடை பிறந்தபொழுது இருந்த நிலைக்கு வந்து பின் ஏறிவரும். குழந்தையின் எடை, பிறந்தவுடன் இருப்பது போல், அது ஆறுமாதம் சென்றதும், இரண்டு மடங்காகவுமாகும். ஓராண்டுக் குழந்தையின் சராசரி எடை 21 இராத்தல், சராசரி உயரம் 30 அங்குலம். இரண்டு வயதில் எடை 26 இராத்தலும், உயரம் 33 அங்குலமிருக்கும்.

முதல் ஆறுமாதத்தில் உறுப்புக்களின் வளர்ச்சி ஒன்று போல் நடைபெறும்.அதன் பின் 18 மாதத்தில் கால்கள் விரைவாகவும், தலையும், நடுவுடலும் மெதுவாகவும் வளர்கின்றன. இரண்டு வயதுக் குழந்தையின் தலையின் உயரம், முழு உடலின் உயரத்தில் ஐந்தில் ஒன்றாயிருக்கும்.

குழந்தை பிறந்ததும் அதன் இதயம் எவ்வளவு பருமனாயிருக்குமோ அதுபோல் முதல் ஆண்டில் இரண்டு மடங்காக ஆகும். இரண்டாம் ஆண்டில் இதயம் மெதுவாக வளரும். உடல் முழுவதும் பருமனாவதிலும், இரண்டு மடங்குகளாகத் தசைகள் பருமனடைகின்றன.

குழந்தை பிறந்தவுடன் அதைக் தூக்கிப் பிடித்தால், தலை நிமிர்ந்து நிற்காது படுக்கவைத்தால், தலை வைத்த