பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

105

நல்ல உடல் நலத்தோடு இருந்தால், 45 முதல் 50 வயது வரை குழந்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அதிக பருமன் உள்ள பெண்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், 50 வயதுக்கு மிகுந்தவர்கள், இம் முறையில் குழந்த பெற முனைவது, சில நேரங்களில் தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

தானத்துக்கான தகுதிகள் : கரு முட்டையைத் தானம் செய்யும் பெண்கள், ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும். 37 வயதுக்கு உள்பட்டவர்களாக இருந்தால் நல்லது. குழந்தை இருப்பவர்கள், குடும்பக் கட்டுப்பாடு செய்தவர்கள், குடும்பக் கட்டுப்பாடு செய்யாதவர்கள், கருமுட்டை தானம் செய்யலாம்.

குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா? : சோதனைக் குழாய், இக்ஸி, முட்டை தானம் போன்ற செயற்கை முறையில் பிறக்கும் குழந்தைகள், ஆரோக்கியமாக இருக்குமா? என்பதில் சமுதாயத்தில் பலத்த சந்தேகம் உள்ளது. இதற்குப்பதில், ஆரோக்கியமாக இருக்கும் என்பதே எந்த முறையில் குழந்தை பிறந்தாலும், வித்தியாசம் ஏதேதும் இருக்காது. எனினும், இந்த முறைகள் யாவும், செலவு மிகுந்தவை. இதனால் இவற்றைக் கையாளுவதற்கு முன், வேறு சில எளிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.

ஆண்களின் குறைபாடுகளுக்கு எளிய சிகிச்சைகள் : ஆண்களின் ஹார்மோன் குறைகளாலும், vericocele காரணமாகவும், அணுக்கள் குறைபாடு, மற்றும் வீரியமின்மை ஏற்படும். ஹார்மோன் குறைபாட்டை, ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து, நிவர்த்தி செய்யலாம்.

விரையில் உள்ள, விரிவடைந்த ரத்த நாளங்களால், வெப்பம் அதிகரித்து, உயிரணு உற்பத்தியில் எண்ணிக்கையும் தரமும், பாதிக்கப்படுவதையே, vericocele என்கிறோம்.