பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

107

எக்ஸ்ரே, லேப்ராஸ்கோப்பி மூலம் அறியலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கருப்பைக் குழாய் அடைப்புள்ள பெண்களுக்கு அறுவை சிகிச்சை (Tuboplasty) செய்து வந்தனர். ஆனால், தற்போது, லேப்ராஸ்கோப்பி மூலம் அடைப்பைக் கண்டறிந்து நீக்க வழியுள்ளது. லேப்ராஸ்கோப்பி செய்யும் போது, பெண் உறுப்பின் வழியாக ஹிஸ்டெரோஸ்கோபியை, கருப்பையின் உள்பாகத்தில் செலுத்தி ஒரு நுண்ணிய (catheter)-ஐ கருக் குழாயின் துவாரத்துக்குள் செலுத்தி அடைப்பை நீக்கலாம். இதன் மூலம் 75 சதவீத பெண்களுக்கு அடைப்பை நீக்க முடிகிறது. இம் முறையால், அடைப்பை நீக்க முடியாதவர்களுக்கு, சோதனைக் குழாய் முறையைக் கையாள்வது நல்லது.

கருப்பையில் பிறவிக் கோளாறு : சில பெண்களுக்குப் பிறவியிலேயே ஒருவித சதை வளர்ச்சியால், கர்ப்பப்பை இரண்டாக இருக்கும். இது அடிக்கடி கருச்சிதைவு ஏற்படக் காரணமாகிறது. இதை அறுவை சிகிச்சையின்றி ஹிஸ்டெரோ ஸ்கோப்பி மூலம் பார்த்து, சதையை அகற்றலாம்.

கருப்பையில் கட்டி : கருப்பையில் இருக்கும் பைப்ராய்டு கட்டி, குழந்தைப் பேறின்மைக்குக் காரணமாக அமைகிறது. கட்டிகளின் எண்ணிக்கை, அளவு, எங்குள்ளது என்பதைக் பொருத்து, இதற்கான சிகிச்சை மாறுபடும். கருப்பையின் மேற்புறம் கட்டி இருப்பின், லேப்ராஸ்கோப்பி மூலமாகவும், உள் புறத்தில் இருப்பின் ஹிஸ்டெரோஸ்கோப்பி மூலமாகவும் அகற்றலாம்.

முட்டைப் பையில் கட்டி : சினைப்பையில் சாதாரண நீர்க் கட்டிகள் முதல், பல வகைக் கட்டிகள் ஏற்படலாம். இவற்றை ஸ்கேன் மூலம் அறியலாம்.