பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

11

கையை நீட்டினால் தொடக் கூடிய தொலைவில் நிறம் தீட்டிய பொருள்களை வைத்து வந்தால், குழந்தை கண்களையும், கைகளையும் தொடர்பு படுத்தும் வழக்கத்தை அறிந்துகொள்ளும். ஆறு மாதம் ஆனபின், அது கைக்கெட்டும் தொலைவிலுள்ள பொருள்களை எடுக்கப் பெரு விரலைப் பயன்படுத்தத் தொடங்கும். எதை எடுத்தாலும், அதை அது தன் வாயில் இடும். அதனால், பொருள்கள் தூயனவாகவும், தொண்டையில் சிக்காத அளவுள்ளனவாகவும் இருத்தல் வேண்டும்.

குழந்தை இரண்டாம் ஆண்டிலும், காலை விரிய வைத்தே நடக்கும். அப்போது அது குதிக்கவும், ஓடவும், ஏறவும் முடியும். சிறிது சிறிதாகப் பேசக் கற்றக்கொள்ளும். இரண்டாண்டு சென்ற குழந்தைக்கு, ஏறக்குறைய 250 சொற்கள் தெரியும்.

குழந்தை, முதல் ஒன்றரை ஆண்டில், அச்சம், சினம், வெறுப்பு ஆகியவற்றைக் காட்டக் கூடும். மகிழ்ச்சியை அறிவிக்கச் சிரிக்கும், கூத்தாடும். முதல் ஆண்டில் குழந்தையிடம் உறங்குதல், உண்ணுதல், கழித்தல் போன்ற செயல்களைச் செய்யும் பழக்கம் உண்டாகும்.

குழந்தை பிறக்கும்போது பற்கள் வெளியே தெரிவதில்லை. அவை ஈறுகளிலுள்ள பற்பைகளில் (Dental sacs) மறைந்துள்ளன.

முதல் ஆண்டின் பிற்பகுதியில் பால் பற்கள் (Milkteeth) வெளியே முளைக்கத் தொடங்கும். சில குழந்தைகளுக்கு, நாட்களித்து முளைக்கலாம். அப்படி முளைப்பதில் தவறு இல்லை. மொத்தம் 20 பால் பற்களும், 30 மாதமாவதற்குள் முளைத்துவிடும். ஆறாவது வயதில் பால் பற்கள் விழுந்து,