பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

153

குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை என்றாலே பெற்றோருக்குப் பதற்றமும், பயமும் ஏற்படுகிறது. இது இயல்பு. ஆனால் பயம் தேவையற்ற ஒன்று. ஏனெனில் குழந்தையின் உறுப்புகள் அனைத்தும் புத்தம் புதிதாக இருப்பதால், சுற்றுச்சூழல் மாசு உட்பட, அனைத்து நோய்க் காரணிகள் விரைவாகத் தாக்குதல் நடத்த வாய்பு இல்லை.

ரத்த அழுத்த நோய், சர்க்கரை சோய், புகை பிடித்தல் அல்லது சுற்றுப்புறமாகக் காற்றால், தாக்குதலுகு உள்ளாகும் நுரையீரல்கள், ஆகியவற்றை எல்லாம் உள்ளடக்கியுள்ள பெரியவர்களை விட, இவை ஏதும் இல்லாத குழந்தைகள், அறுவை சிகிச்சைக்கு அதிகம் தகுதியானவர்கள் என்பதே உண்மை. அறுவை சிகிச்சைகளுக்குப் பின்பும் கூட, அதிக வலி தாங்கும் சக்தியாலும், இயல்பான வளர்ச்சியில், விரைவில் ஆறிவிடும் காயங்களாலும், பெரியவர்களை விட குழந்தைகள், மிக விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுவது ஆச்சரியமான உண்மை.

மிகுந்த ஜாக்கிரதை தேவை : குழந்தைகள் அறுவை சிகிச்சை குறித்துப் பெற்றோர் கவலைப்படத் தேவை இல்லை. ஆனால், மருத்துவர்கள் அதிக கவனத்துடன் அறுவை சிகிச்சைகளைச் செய்ய வேண்டும். ஏனெனில் பெரியவர்களுக்கு சிறிய அறுவை சிகிச்சையாக இருந்தால், அறுவை சிகிச்சை செய்யும் பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து (Local Anaesthesia) கொடுக்கப்படுகிறது. ஆனால், குழந்தைகளைப் பொறுத்த வரை, அனைத்து அறுவை சிகிச்சைகளும், முழு மயக்க நிலையிலேயே (General Anaesthesia) செய்யப்படுகின்றன. எனவே, குழந்தை மயக்க மருத்துவரின் பணி, மிகவும் முக்கியப் பங்கை வகிக்கிறது. இதனால் தான் குழந்தைகள் அறுவைசிகிச்சை அனைத்துமே ‘மேஜர் சர்ஜரி’ ஆகும்.