பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

155

‘அல்ட்ரா சவுண்ட்’ செய்து, கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிப்பதே நல்லது.

சில குழந்தைகளக்கு உணவுக்குழாய், வயிறு, சிறு குடல், பெருங்குடல், ஆசனவாயிலும் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சிறு குடலில் அடைப்பு இருந்தால், பித்த நீர் மஞ்சளாக, வாந்தியாக வெளியேறும். இந்த அடைப்புகளையும், அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம். இதுபோன்ற அடைப்புக் கோளாறு 5000 குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது.

மலச்சிக்கல் : பிறந்த குழந்தை தொடக்கத்தில் எட்டு தடவை மலம் கழிக்கும். வளர, வளர ஒரு வயதில் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை மலம் கழிக்கும்.

உணவுப் பழக்கம் காரணமாகவே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது. குடல் இயக்கம் சரியாக இல்லாமல் போனாலோ, அல்லது குடலை இயக்குகிற நரம்புகளில் கோளாறு இருந்தாலோ, மலச்சிக்கல் ஏற்படும். மிகவும் முயற்சி செய்து மலம் போவதும் மலச்சிக்கலின் ஆரம்பம் தான். எனவே, மலச்சிக்கலை அலட்சியப்படுத்தக்கூடாது.

குறிப்பாக 8, 9 மாதக் குழந்தைக்குப் பால், பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட மாவு உணவுப் பொருள்களை மட்டுமே கொடுப்பதால் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். கீரை, கேரட், பீன்ஸ் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளையும், பழங்களையும் கொடுத்தால் மலச்சிக்கல் வராது. குழந்தைக்கு நான்கு மாதம் முதலே கேரட் போன்ற காய்கறிகளை வேக வைத்துக் கொடுக்க வேண்டும்.

விளக்கெண்ணெய் கொடுப்பது, ஆசன வாயில் வெற்றிலைக் காம்பு, சோப்பு, புகையிலைத் துண்டை