பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

பாப்பா முதல் பாட்டி வரை

பைக்குச்செல்லும் இடத்தில் இருக்கலாம். மூத்திரப் பையிலிருந்து வெளியேறும் தாரையில் இருக்கலாம். கற்கள் இருந்தால், சிறு நீர் கழிக்கும் போது வலி இருக்கும். சில நேரங்களில் சிறுநீரில் ரத்தம் வரும்.

பெற்றோரே, திட்டாதீர் : சிறுநீர்ப் பையில் கற்கள் இருந்தால், வலியைச் சொல்லத் தெரியாமல், குழந்தைகள் தங்களது சிறு நீர் வெளியேறும் உறுப்புகளை அவ்வப்போது கைகளால் பிசையும் , அல்லது சுவரின் மீது அடிக்கடி உறுப்புகளைத் தேய்க்கும். குப்புறப்படுத்துக் கொண்டு, உறுப்புகளைத் தேய்க்கும். வலியின் காரணமாகவே, குழந்தைகள் இவ்வாறு செய்கின்றன. ‘கையை எடு’ என்று பெற்றோர் திட்டக் கூடாது. பதிலாக மருத்துவரிடம் உடனடியாகச் செல்வது நல்லது. அல்ட்ரா சோனோ கிராம் மூலம், சிறுநீர்ப் பையில் கற்கள் இருக்கிறதா என்று சோதித்துவிடலாம்.

சிறிய கற்களாக இருந்தால், சிறு நீரில் தாமாகவே வெளியேறிவிடும். பெரிய கற்களாக இருந்தால் அறுவை சிகிச்சை அவசியம்.

விரைப்பையில் விரைகள் இல்லையா?: ஆண் குழந்தையின் விரைகள், கருவில் உள்ள குழந்தையின் வயிற்றுப் பகுதியில் தான் முதலில் தோன்றுகின்றன. கருவின் வளர்ச்சியின் போது, அவை கீழிறங்கி விரைப்பைகளை அடைகின்றன. (வயிற்றுக்கும் விரைப் பைக்கும் இடையே உள்ள இணைப்பு பற்றி ஏற்கனெவே சொல்லப்பட்டுள்ளது) விரை இறங்கும் பாதையில் ஏதேனும் தடை இருந்தாலோ அல்லது பாதை மாறிப் போவதாலோ, விரைகள் விரைப் பையில் இறங்காமல் இருக்கலாம். இக் குறை ஒருபுறமோ அல்லது இரு புறத்திலுமோ ஏற்படலாம். 2 வயது அளவில் அறுவை சிகிச்சை மூலம் விரைகளை, அவற்றின் சரியான இடமான விரைப் பைகளில் பொருத்துவது அவசியம்.