பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

பாப்பா முதல் பாட்டி வரை

மூலமாகச் சரி செய்து விடலாம். வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளக்கு எலும்பு முறிவு, விரைவில் குணமாகிவிடும். எலும்பு முறிவு ஏற்பட்ட பாகத்தைத் தலையணை மேல் உயரமாக,வைத்து, மூட்டுக்களையும் அசைத்துக் கொடுத்து, வீக்கம் ஏற்படாமல் செய்ய வேண்டும்.

எத்தகைய கட்டுப் போட்டிருந்தாலும், உடற்பயிற்சி மிக அவசியம். கட்டுப் போட்ட பாகத்தைப் பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டால், அந்தப் பாகத்துக்கு பலம் குறைந்து, ஊனம் ஏற்படலாம். அந்தப் பாகத்துக்கு உடற்பயிற்சி அளிக்காவிட்டால் அது இறக்கமடைந்து விடும்.

தலைக்காயம் : இரண்டு சக்கர வாகனங்களால் ஏற்படக்கூடிய விபத்துக்களால் தான், அதிகமாக எலும்பு முறிவு ஏற்படுகிறது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், ஹெல்மட் அணியாமல் செல்வதால், தலையில் காயமடைந்து, உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. இவ்வாறு வேகமாகச் சென்று, உயிரிழப்பவர்களில் 20 சதம் பேர், தலைக் காயம் காரணமாக உயிரிழக்கின்றனர்.

தலையில் அடிபட்டு, மூளைக்குள் ரத்தக் கசிவு இருப்பதை, சி.டி. ஸ்கேன் செய்து பார்த்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, உயிரைக் காப்பாற்றி விடலாம். பாதிக்கப்பட்ட எலும்புக்குள் பொருத்தப்படும் ஸ்குரூ, துரு ஏறாத, கார்பன் இல்லாத ஸ்டெயினால் ஸ்டீல் பிளேட் மிகவும் சிறந்தது. 30-40 ஆண்டுகள் வரை இதனால் பாதிப்பு ஏற்படுவதில்லை. வயது குறைவாக உள்ளவர்ளுக்கு, உள்ளே இருக்கும் பிளேட்டை, 2-3 ஆண்டில் எடுத்துவிடுவது நல்லது. 70-80 வயது ஆனவர்களுக்கு மீண்டும், அறுவை சிகிச்சை செய்து, பிளேட்டை நீக்க வேண்டிய அவசியம் இல்லை.