பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

பாப்பா முதல் பாட்டி வரை

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் போலியோ நோயினால் பாதிக்கபடும் நிலை இருந்தது. தீவிர சிறப்பு சொட்டு மருந்து முகாம்கள் காரணமாக 1999-ல் தமிழகத்தில் 11 குழந்தைகள் போலியோ வைரஸால் பாதிக்கப்பட்டனர்; இவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட மூன்று குழந்தைகள் மட்டுமே ஊனம் அடையும் அளவுக்குப் பாதிக்கப்பட்டனர். இந்த அளவுக்கு எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே வைரஸை சுற்றுப்புறத்திலிருந்து ஒழிப்பதன் மூலம் போலியோ நோய் ஒழிப்பைப் பூர்த்தி செய்ய முடியும்.

நோய் வராமல் தடுத்துக்கொள்ள என்ன வழி ? : குழந்தை பிறந்தது முதலே அட்டவணைப்படி போலியோ சொட்டு மருந்து கொடுத்தல், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் போதும் சொட்டு மருந்து கொடுத்தல் ஆகியவை மூலம் போலியோ தாக்குதலில் இருந்து குழந்தையைக் காக்க முடியும். மேலும் குழந்தை வளரும் முதல் 5 ஆண்டுதான் முக்கியமான வளர்ச்சிப் பருவம் என்பதால் புரதச்சத்து நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து கொடுப்பது அவசியம். பால், முட்டை, மீன், பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொடுப்பது அவசியம். ஏனெனில் போலியோ நோய்குத் தடுப்பு உண்டு. சிகிச்சை கிடையாது. நோய் வந்த பிறகு ஊட்டச்சத்து உணவுகள் கொடுத்துப் பலன் இல்லை.

பெற்றோரே : கடந்த அக்டோபர், நவம்பரில் நடந்த முதல் இரண்டு தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்களில் பெற்றோரின் முழு ஒத்துழைப்பு காரணமாக தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. எனவே வரும் டிச.19 (ஞாயிறு), ஜனவரி 23 (ஞாயிறு) ஆகிய இரண்டு தேதிகளிலும் நடைபெறும் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்களில் அதே ஒத்துழைப்பைத் தர பெற்றோர் தவறக் கூடாது.