பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

205

கினால், ஒரு குழந்தைக்கு ஊனம் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக, மற்ற குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத குழந்தைகளின், குடலில் போலியோ வைரஸ் தங்கி இருக்கும்.

வெளியேற்றுவது எப்படி? : ஊனமோ அல்லது வேறு விளைவுகளோ ஏற்படாமல் உள்ள குழந்தைகளின் உடலில் இருந்து போலியோ வைரஸை மலம் மூலம் வெளியேற்ற முடியும். இதற்காகவே இலவசமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்தை ஒரே நேரத்தில் கொடுப்பதன் மூலம் கிருமிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் மலத்தின் மூலம் வெளியேற்றப்படும். இவ்வாறு வெளியேறும் கிருமிகள் சுற்றுப்புற வெப்பத்தில் 48 மணி நேரத்துக்கு மேல் உயிர்வாழ முடியாமல் மடிந்து விடும். நோய் பரப்பும் போலியோ வைரஸ் கிருமிகள் எந்தக் குழந்தையின் குடலிலும் தங்கிப் பெருக வாய்ப்பு இருக்காது. எனவே தான் எந்தக் குழந்தைக்கும் விட்டுப் போகாமல் சொட்டு மருந்து கொடுப்பதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

தமிழகத்தில் : ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பு மருந்துகள் அட்டவணைப்படி பிறந்து ஒன்றரை வயது ஆவதற்குள் ஆறு முறை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கொடுத்தும் கூட போலியோ வைரஸ் சுற்றுப்புறத்தில் இருந்ததால் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து தீவிர சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு தீவிர சிறப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடத்தியதன் மூலம் தமிழகத்தில் பலன் கிடைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் 5