பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

பாப்பா முதல் பாட்டி வரை

நாமும் நமது அண்டை நாடுகளும், போலியோ நோயை ஒழித்தால் தான் போலியோ நோயிலிருந்து உலகம் விடுபட முடியும்.

போலியோ வைரஸ் பரவுவது எப்படி? : போலியோ நோய் பரப்பும் நுண்கிருமிகள், பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளேயே தாக்குகின்றன. இக் கிருமிகள், மலத்தின் மூலம் பரவுகின்றன. மூடி வைக்கப்படாமல், ஈ மொய்த்த உணவு, கழிப்பறை சென்றுவிட்டு, சோப்பு போட்டுக் கை கழுவாமல் சாப்பிடுதல், ஆகியவை காரணமாக வாய் வழியாகக் குழந்தையின் வயிற்றுக்குள் இக் கிருமி செல்கிறது. பின்னர் குடலில் தங்கி பல மடங்காகப் பெருகுகிறது.

ஊனம் ஏன்?: குடலில் பல்கிப் பெருகும் போலியோக் கிருமிகள், ரத்த ஒட்டத்தில் கலந்து, முகுதுத் தண்டு வடத்தில் உள்ள நரம்பு மண்டலத்தைத் தாக்கத் தொடங்குகின்றன. இவ்வாறு, நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால், தசைப் பகுதிகள் பலவீனம் அடைகின்றன. குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டு, கை, கால்கள் துவளத் தொடங்குகின்றது. நோய் தீவிரமடையும் நிலையில், கை அல்லது காலில் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது.

குழந்ததைகளுக்கு ஏன் : குழந்தைகளுக்கு, ஐந்து வயது ஆவதற்குள் மூளை உள்பட, நரம்பில் தொடர்புடைய இணைப்புகள், 90 சதவீத வளர்ச்சி அடைகின்றன. இவ்வாறு வளர்ச்சி அடையும் நிலையில்,போலியோ வைரஸ் முதுகுத் தண்டுவடத்தைத் தாக்கும்போது பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

100-ல் ஒரு குழந்தை : போலியோ வைரஸ் தாக்கினாலும், எல்லாக் குழந்தைகளும் ஊனம் அடைவதில்லை. 100 குழந்தைகளைப் போலியோ வைரஸ் தாக்-